×

அமெரிக்காவின் எச்சரிக்கையை மீறி சிரியாவில் குர்து படையினர் மீது துருக்கி ராணுவம் குண்டு மழை : பொதுமக்கள் உள்பட 45 பேர் உயிரிழப்பு

டமாஸ்கஸ் : அமெரிக்காவின் கடும் எதிர்ப்பையும் மீறி, சிரியாவில் உள்ள குர்து படையினர் மீது துருக்கி ராணுவம் தாக்குதலை தொடங்கியுள்ளதால் மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் நிலவுகிறது. சிரியாவில் முடிவில்லாமல் தொடரும் போரில் அமெரிக்கா இனியும் பங்கேற்காது என்று கடந்த திங்களன்று தெரிவித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், சிரியாவின் வடக்கு பகுதியில் இருந்து அமெரிக்க படைகள் விலக்கி கொள்ளப்படும் என்றார். இதையடுத்து அமெரிக்க படையினர் சிரியாவின் வடக்கு பகுதியில் இருந்து வெளியேறினர். இந்நிலையில் சிரியாவில் உள்ள குர்து படையினர் மீது துருக்கி தாக்குதல் நடத்தினால், அந்நாட்டின் பொருளாதாரத்தையே அழித்துவிடுவதாக டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஆனால் அமெரிக்காவின் எச்சரிக்கையையும் மீறி குர்து படையினர் மீது துருக்கி ராணுவம் ஏவுகணை மற்றும் விமானத் தாக்குதல் மேற்கொண்டுள்ளது. குர்து படையினரும் பதில் தாக்குதல் நடத்தி வருகின்றனர். துருக்கியின் திடீர் ஏவுகணை தாக்குதலில் பொதுமக்கள் உள்ளிட்ட 45 பேர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. சிரியாவில் இருந்து செயல்படும் அமெரிக்க ஆதரவு பெற்ற குருது படையினர் அவ்வப்போது துருக்கியிலும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். ஆனால் சிரியாவில் உள்ள குர்து படையினரை அகற்றிவிட்டு அந்த இடத்தில் தங்கள் நாட்டில் உள்ள 36 லட்சம் அகதிகளை குடியமர்த்த துருக்கி முனைப்பு காட்டி வருவது என்பது குறிப்பிடத்தக்கது. 


Tags : army bombing ,Turkish ,forces ,Kurdish ,Syria ,civilians ,US , US, Syria, Kurdish forces, Turkey, military, Donald Trump, warning, missile, air strike
× RELATED அரியலூரில் பணியின்போது மாரடைப்பு ஏற்பட்டு ஆயுதப்படை காவலர் உயிரிழப்பு..!!