விபத்தில் இறந்தவர் குடும்பத்துக்கு 8 லட்சம் இழப்பீடு

சென்னை: போரூர் லட்சுமி நகரை சேர்ந்தவர் மான்விழி. இவர் கடந்த 25.3.2016 அன்று இருசக்கர வாகனத்தில் சென்றபோது அந்த வழியே அரசு பேருந்து வந்துள்ளது. அந்த பேருந்து திடிரென கட்டுபாட்டை இழந்து, மான்விழி சென்ற இருசக்கர  வாகனத்தின் மீது வேகமாக மோதியுள்ளது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர், சம்பவ இடத்திலையே உயிரிழந்தார். இதனையடுத்து போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்தநிலையில், மான்விழியின் கணவர்  மாரிமுத்து சென்னை, உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள மோட்டர் வாகன விபத்து வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில், மான்விழி இறப்புக்கு உரிய இழப்பீடு கோரி மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதி சாந்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மான்விழி டெய்லர் வேலை செய்து வந்ததும். அதன் மூலம் மாதம் 15 ஆயிரம் வருமானம் பெற்று வந்ததும் தெரியவந்தது. மேலும், பிரேத பரிசோதனையில் வயது 57 என்பதும்  தெரியவந்தது, விபத்திற்கு தமிழக அரசு போக்குவரத்து தான் காரணம் என்பதும் தெரியவந்தது. இதனையடுத்து நீதிபதி மான்விழியின் கணவருக்கு, தமிழக அரசு போக்குவரத்துகழக இயக்குனர், விழுப்புரம் 8 லட்சத்து 35 ஆயிரம் இழப்பீடு வழங்க  உத்தரவிட்டார்.


Tags : deceased , Accident, deceased, compensation
× RELATED ‘காணவில்லை’ புகார் மீது வழக்கு...