×

வேணா, வலிக்குது...பாக். புலம்பல்

இஸ்லாமாபாத்: எல்லைக் கட்டுப்பாடு கோடு அருகே இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் தங்கள் நாட்டு வீரர் பலியானதாக பாகிஸ்தான் குற்றம்சாட்டியுள்ளது. ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்த பிறகு,  இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வருகிறது. மத்திய அரசின் நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் பாகிஸ்தான், இப்பிரச்னையை சர்வதேச அளவில் கொண்டு செல்ல பலமுறை முயன்று தோல்வி சந்தித்துள்ளது.  இதனால் ஏற்பட்டுள்ள கோபத்தால், காஷ்மீர் மாநில எல்லைகளில் அந்நாட்டு ராணுவம் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு, இந்திய ராணுவமும் பதிலடி கொடுத்து வருகிறது.

இந்நிலையில், எல்லைக்கட்டுப்பாடு கோடு அருகே இந்திய ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தி வருவதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது. இது குறித்து இந்நாட்டு ராணுவம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பாரா, சிரிகாட்  எல்லைக்கட்டுப்பாடு கோடு பகுதிகளில் இந்திய ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது. இதில், எங்கள் நாட்டு வீரர் ஒருவர் பலியாகி உள்ளார். மேலும், 2 பெண்கள் காயமடைந்துள்ளனர்,’ என்று கூறியுள்ளது. ‘கடந்த 6, 7ம் தேதிகளில்  இந்திய படைகள் நடத்திய தாக்குதலில் பெண் ஒருவர் உயிரிழந்தார். இது தொடர்பாக இந்திய துணைத் தூதர் கவுரவ் அலுவாலியாவை நேரில் அழைத்து கண்டனம் ெதரிவிக்கப்பட்டது’ என்றும் பாகிஸ்தான் அரசு கூறியுள்ளது.



Tags : Vena ,Pak , Pakistan
× RELATED பாக். செய்தி சேனல் ஹேக்கிங்: இந்திய தேசிய கொடி ஒளிபரப்பாகி பரபரப்பு