×

பாகிஸ்தானில் விளையாட வேண்டும்: கோஹ்லிக்கு ரசிகர் அழைப்பு

நீங்கள் பாகிஸ்தானில் விளையாடுவதை நாங்கள் காண விரும்புகிறோம் என்று பாகிஸ்தான் ரசிகர் ஒருவர் இந்திய கேப்டன் விராட் கோஹ்லிக்கு அழைப்பு விடுத்துள்ளது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
கேப்டன் விராட் கோஹ்லிக்கு இந்தியாவை தவிர உலகத்தின் பல நாடுகளில் ரசிகர்கள் அதிகம் உள்ளனர். இந்நிலையில் ஒரு பாகிஸ்தான் ரசிகர் இந்தியா கேப்டன் விராட் கோஹ்லியின் பெரிய ரசிகராக இருப்பார் என்று பலர்  எதிர்பார்க்கவில்லை. அவர் தன் டிவிட்டரில் கோஹ்லியை அணுகி, தன்னுடைய அன்பை வெளிப்படுத்தியுள்ளார்.

அவர் வகையில் போஸ்டர் வைத்திருக்கும் புகைப்படத்தை டிவிட்டரில் பகிர்ந்தார். அதில், “விராட் கோஹ்லி நீங்கள் பாகிஸ்தானில் விளையாடுவதை நாங்கள் காண விரும்புகிறோம். நீங்கள் இங்கு வந்து விளையாட வேண்டும் என்று நாங்கள்  விரும்புகிறோம். நாங்கள் உங்களை விரும்புகிறோம், நான் உங்களுடைய மிகப் பெரிய ரசிகன். நிறைய அன்பும் நம்பிக்கையும்’’ என்று அந்த ரசிகர் புகைப்படத்துடன் பதிவிட்டார். இந்த பதிவு பல கருத்துக்களை ஈர்த்தது, பலரும் ரசிகரின் இந்த  அழைப்புக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.


Tags : Kohli ,Pakistan , Pakistan, Kohli
× RELATED ஆன்லைன் விளையாட்டு விளம்பரங்களில்...