×

ஜிஎஸ்டி வருவாயை அதிகரிக்க குழு அமைப்பு

புதுடெல்லி: ஜிஎஸ்டி வருவாயை அதிகரிப்பது தொடர்பாக பரிந்துரைக்க அதிகாரிகள் குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதத்தில் ஜிஎஸ்டி வருவாய் 19 மாதங்களில் மிக குறைந்த பட்ச அளவாக 91,916 கோடி வசூல்  ஆகியுள்ளது. இந்நிலையில், ஜிஎஸ்டி வருவாயை மேலும் அதிகரிப்பது எப்படி என பரிந்துரை செய்யவும், வரி நிர்வாகத்தை மேம்படுத்தவும் அதிகாரிகள் கொண்ட குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது. இந்த குழு பரிந்துரைப்படி வரி மாற்றங்கள்  செய்யப்படலாம் என தெரிகிறது. கடந்த மாதம் ஜிஎஸ்டி வசூல் குறைந்தாலும், நடப்பு நிதியாண்டின் முதல் 5 மாதங்களில் ஜிஎஸ்டி வருவாய் முந்தைய ஆண்டை விட 13 சதவீதம் அதிகரித்துள்ளது. ஆனால், மாநிலங்களுக்கு வருவாய்  குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.Tags : GST revenue
× RELATED பாரம்பரிய ஆய்வு குழு அமைப்பு வரலாற்றை...