×

இந்தோனேஷிய பாதுகாப்பு அமைச்சருக்கு கத்திக் குத்து: ஐஎஸ் ஆதரவு தம்பதி கைது

ஜகார்தா: ஜாவா தீவில், இந்தோனேஷியாவின் பாதுகாப்பு அமைச்சர் விரான்டோவை (72), ஐஎஸ் ஆதரவு தம்பதியினர் கத்தியால் குத்தினர். இந்தோனேஷியாவின் பாதுகாப்பு அமைச்சர் விரான்டோ. இவர் நேற்று ஜாவா தீவுக்கு சென்றார்.   பாண்டேகிளாங் என்ற இடத்தில் அவர் காரை விட்டு இறங்கிய போது, அவரை ஒரு தம்பதியினர் கத்தியால் குத்தி தாக்கினர். உடனே, பாதுகாவலர்கள் அவர்களை சுற்றிவளைத்து பிடித்தனர். வயிற்றில் 2 இடங்களில் கத்தி குத்து காயமடைந்த  விரான்டோ, ஹெலிகாப்டர் மூலம் தலைநகர் ஜகார்தா கொண்டு செல்லப்பட்டார்.

அங்குள்ள மருத்துவமனையில் அவருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை நடந்தது. கத்தியால் குத்திய தம்பதியினர் ஜமா அன்சாரத் தவுலா (ஜேஏடி) என்ற தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள். இந்தோனேஷிய சர்ச்சுகளில் நடந்த  குண்டுவெடிப்பு தாக்குதலில் இந்த அமைப்பினருக்கு தொடர்பு உள்ளது. இவர்கள் ஐஎஸ் ஆதரவு அமைப்பினர். விரான்டோ விரைவில் நலம் பெற பிரார்த்திக்குமாறு மக்களிடம் இந்தோனேஷிய அதிபர் ஜோகோ விடோடோ வேண்டுகோள்  விடுத்துள்ளார்.

Tags : ISIS ,defense minister ,Indonesian , ISI: Couple arrested for stabbing Indonesian defense minister
× RELATED ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் பயங்கரம்: இசை...