×

திருப்பதியில் செம்மரம் கடத்திய தர்மபுரி கும்பல் கைது

திருமலை: திருப்பதி வனப்பகுதியில் 13 செம்மரக்கட்டைகள் கடத்திய தர்மபுரியை சேர்ந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர். ஆந்திராவில் திருப்பதி செம்மரக் கடத்தல் தடுப்பு அதிரடிப்படை கூடுதல் கமாண்டன்ட் ரவி சங்கருக்கு கிடைத்த  ரகசிய தகவலின்பேரில்  டிஎஸ்பி அல்லாபாஷா தலைமையில் ஆர்எஸ்ஐ வாசு, துணை வனச்சரகர் நரசிம்மலு ஆகியோர் நேற்றுமுன்தினம் திருமலையில் இருந்து திருப்பதிக்கு செல்லும் அலிபிரி மலைப்பாதையில் வாகன சோதனையில்  ஈடுபட்டனர்.அப்போது அவ்வழியாக வந்த தமிழக பதிவெண் கொண்ட ஒரு காரை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் 13 செம்மரக்கட்டைகளை கடத்தி வந்தது தெரியவந்தது. விசாரணையில் காரில் வந்தவர்கள் தர்மபுரி மாவட்டம், சித்தேரியை  சேர்ந்த ஜெயபால்(25), அருணாசலம்(30), கந்தசாமி(27), டிரைவர் வேலு(35) என தெரிந்தது. இதையடுத்து போலீசார் 4 பேரையும் கைது செய்து. கார் மற்றும் செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு 8 லட்சம்.


Tags : gang ,Dharmapuri ,Tirupati , Thirupathi, Semmaram, Dharmapuri, gang arrested
× RELATED கடத்திய தங்கத்தின் அளவு பற்றி...