×

சீன அதிபர் வருவதால் சென்னை சுத்தமாகியுள்ளது உலக தலைவர்கள் வந்தால்தான் தமிழகம் சுத்தமாகும்: ஐகோர்ட் கருத்து

சென்னை:  உலக தலைவர்கள் வந்தால் தான் தமிழகம் சுத்தமாகும் என்று சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.திருமணத்துக்காக வைக்கப்பட்ட பேனர் விழுந்து குரோம்பேட்டை, பவானி நகரை சேர்ந்தவர் ஐடி ஊழியர் சுப (23). இறந்தார். இந்நிலையில், சுபயின் தந்தை ரவி தனது மகள் மரணத்துக்கு நஷ்டஈடாக ரூ.1 கோடி மற்றும் பல்வேறுகோரிக்கை  கொண்ட மனுவை  உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதிகள் வைத்தியநாதன், சரவணன் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரரின் வக்கீல் நீதிபதியிடம், சுப மரணம் தொடர்பான வழக்கை சிறப்பு புலனாய்வு பிரிவிற்கு மாற்ற வேண்டும் என்று கூறினார்.  அப்போது, அரசு பிளீடர் ஜெயபிரகாஷ் நாராயணன் ஆஜராகி இந்த வழக்கு ஏற்கனவே வேறு ஒரு அமர்வில் விசாரணையில் உள்ளது.சுபயின் குடும்பத்துக்கு இடைக்கால நிவாரணமாக ரூ.5 லட்சம் வழங்க உத்தரவிடப்பட்டு அந்த தொகையும் வழங்கப்பட்டுள்ளது. குற்றவாளிகள் அனைவரும் கைதுசெய்யப்பட்டு இன்னும் சிறையில் உள்ளனர் என்றார்.அப்போது, நீதிபதிகள், சீன அதிபர் வரவுள்ள நிலையில் சென்னை விமான நிலையத்தில் இருந்து மகாபலிபுரம் வரை சாலைகள் முழுவதுமாக சீரமைக்கப்பட்டுள்ளன. வெளிநாட்டு தலைவர்கள் இங்கே வந்தால் தான் தமிழகம் முழுவதும்  சுத்தமாகும். ஒரு குடியானவன் வீட்டுக்கு ராஜா செல்லும்போது அவர் செல்லும் வழியெல்லாம் சுத்தமாக வைக்கப்பட்டிருந்தது என்ற ஒரு குட்டிக் கதையை கூறினர்.

சுப மரணம் அடைந்த விவகாரத்தில் காற்றின் மீதுதான் வழக்கு போடவேண்டும் என்று பேசுவதை ஏற்க முடியாது. அப்துல் கலாம் கண்ட 2020 கனவு நிறைவேறுகிறதா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.பேனர் கலாசாரத்தை ஒழிக்கும் நோக்கில்தான் தனி நீதிபதியாக விசாரித்த வழக்கில் “உயிருடன் இருப்பவர்களின் புகைப்படங்கள் பேனரில் இடம்பெறக்கூடாது” என்று உத்தரவிட்டேன். ஆனால் சென்னை மாநகராட்சி மேல்முறையீடு செய்து அந்த  “உயிருடன் வைப்பவர்களுக்கு வைக்க கூடாது” என்ற பகுதியை மட்டும் நீக்கம் பெற்றுவிட்டது. உயிருடன் இருப்பவர்களுக்கு பேனர் வைக்க அனுமதித்த இரு நீதிபதிகள் உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். பேனர் வைக்க அனுமதி  கோரி விண்ணபிப்பவர்கள், மனுவை பரிசீலிக்கும் அதிகாரிகள், அச்சிடுவோர் ஆகியோரின் ஆதார் விவரங்களை தனி பதிவேடு மூலம் பராமரிக்க வேண்டும் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி இடைக்கால நிவாரணம் வழங்கப்பட்டுள்ள நிலையில், ஒரு கோடி ரூபாய் இழப்பீடு கோரிக்கையை எப்படி பரிசீலித்து முடிவெடுக்க உத்தரவிடமுடியும். எனவே, இந்த வழக்கை விதிமீறல் பேனர்  வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகள் எம்.சத்யநாராயணன், என்.ஷேஷசாயி அமர்விற்கு மாற்றுகிறோம் என்று உத்தரவிட்டனர்.

Tags : Chennai ,arrival ,Chinese ,Chancellor ,President , Chennai , Chinese President, clean ,world leaders ,Icort opinion
× RELATED சென்னை பட்டாளத்தில் பெயிண்ட் கடையில்...