×

கமலுடன் பி.வி.சிந்து சந்திப்பு

சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனை பேட்மிட்டன் வீராங்கனை பி.வி.சிந்து சந்தித்து பேசினார்.சென்னை ஆழ்வார்பேட்டையிலுள்ள கட்சி அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடந்தது. இதையடுத்து நிருபர்களிடம் கமல் பேசும்போது, ‘இது அரசியலுக்கு அப்பாற்பட்ட சந்திப்பு. கட்சி அலுவலகத்தில் என்னை சந்தித்ததால் இதை சொல்லி ஆக வேண்டியுள்ளது. கட்சிகளை தாண்டி இந்தியாவுக்கு பெருமைத் தேடித் தந்த வீராங்கனையுடன் நடந்த சந்திப்பை பெருமையாக நினைக்கிறேன். ஏழை சிறுவர், சிறுமிகள்  விளையாட்டு துறையில் சாதிக்க சிந்துவும் ஒரு ஊன்றுகோலாக இருக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தேன்.

அதில் எனது பங்கும் இருக்கும் வகையில் உதவி செய்ய தயாராக உள்ளேன்’ என்றார். சிந்து கூறும்போது, ‘இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர்களில் கமலும் ஒருவர். அவரது படங்களை பார்த்திருக்கிறேன். ஒரு ரசிகையாக அவரை  சந்தித்து பேசியுள்ளேன்’ என்றார்.

Tags : Kamal PVCindhu ,Kamal ,meeting , With ,Kamal, PVCindhu ,meeting
× RELATED பாபர் மசூதி தீர்ப்பு: கமல் ஆதங்கம்