×

கலெக்டர்கள் மாற்றத்தில் அரசியல் தலையீடு: இந்திய கம்யூ. குற்றச்சாட்டு

சென்னை: கலெக்டர்கள் மாற்றத்தில் அரசியல் தலையீடு உள்ளதாக  இந்திய கம்யூனிஸ்ட் குற்றம்சாட்டியுள்ளது. மதுரை மாவட்ட ஆட்சியர் நாகராஜன் மாற்றம் தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளன. கிடப்பில் போட்டு வைத்திருந்த அங்கன்வாடிப் பணியாளர் நியமனம் செய்தததைத் தொடர்ந்து ஆளும் கட்சியினர் கொடுத்த அரசியல்  அழுத்தம் காரணமாக மாவட்ட ஆட்சியர் மாற்றம் நடைபெற்றதாக செய்திகள் வெளியாகி உள்ளன.ஆளும் கட்சியின் நிர்பந்தத்திற்கு பணியாத அலுவர்களை பணி மாற்றம் செய்து வரும் அரசின் அதிகார அத்துமீறல் நடவடிக்கையை கண்டிப்பதாக இந்தியக் கம்யூனிஸ்ட் தெரிவித்துள்ளது.

Tags : Intervention , Political , Collectors Change, Indian Commun., Accusation
× RELATED நடிகை விஜயலட்சுமி விவகாரத்தில்...