×

பிரதமர் மோடியை திடீரென சந்தித்து ஏன்?: பாமக நிறுவனர் ராமதாஸ் விளக்கம்

புதுடெல்லி: பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் எம்பி அன்புமணி ஆகிய இருவரும் பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் உள்ள அவரது இல்ல அலுவலகத்தில் நேரில் சந்தித்து நேற்று பேசியுள்ளனர். சுமார் 20 நிமிடம்  நீடித்த இந்த பேச்சு வார்த்தையின் போது பல்வேறு ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.  இதையடுத்து பாமக நிறுவனர் ராமதாஸ் நிருபர்களிடம் கூறும்போது,” பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினேன். அப்போது ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சுமார் 29 ஆண்டுக்கும் மேலாக சிறை தண்டனை  அனுபவித்து வரும் பேரறிவாளன் உட்பட ஏழு பேரையும் விடுதலை செய்ய வேண்டும். அதேப்போல் காவிரி -கோதாவரி ஆறுகளை இணைப்பதற்கான நடவடிக்கைகளை விரைவுப்படுத்த வேண்டும். மேலும் தமிழகத்தில் மத்திய அரசால்  செயல்படுத்த திட்டமிடப்பட்டு இருக்கும் ஹைட்ரோ கார்பன் மற்றும் மீத்தேன் திட்டங்களை ரத்து செய்ய வேண்டும்.

இதைத்தவிர முக்கியமாக காவிரி பாசன டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக விவசாயிகளின்  நலனை அடிப்படையாக கொண்டு அறிவிக்க வேண்டும் என்ற ஆகிய மூன்று கோரிக்கைகள் பிதரமர் மோடியிடம் தெரிவிக்கப்பட்டது. மேலும் அதுகுறித்த மனுவையும் அவரிடம் கொடுத்துள்ளோம். இதையடுத்து அதில் குறிப்பிடப்பட்டுள்ள  கோரிக்கைகள் அனைத்தையும் சாதகமான முறையில் பரிசீலிப்பதாக அவர் எங்களிடம் உறுதியளித்தார். மேலும் இந்த சந்திப்பு என்பது மிகவும் சுமூகமாகவும், ஆக்கப்பூர்வமாகவும் அமைந்திருந்தது.  இந்திய சீன உறவுகளை வலுப்படுத்தும்  விதமாக இன்றைய சந்திப்பானது தமிழக மக்களை பெருமையடைய செய்வதாகவும், இதற்காக தமிழக மக்களின் சார்பில் பிரதமர் மோடியிடம் தெரிவித்துக் கொண்டேன் என அவர் கூறினார்.

இதில் தமிழகத்தை பொருத்தமட்டில் பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் நேரில் சந்தித்து பேச முதல்வர் எடப்பாடி பழனிசாமியை தவிர, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கே சமீப காலமாக அனுமதி கிடைக்காதிருந்த நிலையில்  தற்போது அ.தி.மு.க கூட்டணியில் இடம்பெற்று இருக்கும் பாமக கட்சியின் நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் ஆகியோர் பிரதமர் நரேந்திர மோடியை நேற்று திடீரென சந்தித்து பேசியுள்ளது என்பது அதிமுக வட்டாரத்தில் பெரும்  அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது என்று தான் கூற வேண்டும்.

Tags : Modi ,founder ,Ramadas , Modi Suddenly, Meet, Modi, Ramadas ,Founder
× RELATED ஈரான் – இஸ்ரேல் இடையிலான போர் பதற்றம்;...