×

அதிமுக அமைச்சர்களுக்கு உள்ளூர் வங்கியில் கூட பணம் இல்லை: ராஜேந்திரபாலாஜி சொல்கிறார்

களக்காடு: அதிமுக அமைச்சர்களுக்கு உள்ளூர் வங்கி கணக்கில் கூட பணம் கிைடயாது என்று அமைச்சர் .ராஜேந்திர பாலாஜி தெரிவித்து உள்ளார்.நெல்லை மாவட்டம் களக்காடில் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி நேற்று அளித்த பேட்டி: தமிழகத்தில் அதிமுக ஆட்சிக்கு ஆதரவு பெருகுகிறது. எடப்பாடி பழனிசாமி ஆட்சியை பற்றி பொதுமக்கள் பேச ஆரம்பித்துள்ளனர். அதிமுக  அமைச்சர்களுக்கு உள்ளூர் வங்கி கணக்கில் கூட பணம் கிடையாது. நாங்கள் எப்படி வெளிநாட்டில் பணம் பதுக்க முடியும்?.வலுவான பாரதம் வேண்டும் என்பதற்காக பாஜவை அதிமுக ஆதரித்தது. தமிழக உரிமைக்காக மத்திய அரசுக்கு எதிராக அதிமுக பல்வேறு காலக்கட்டங்களில் குரல் எழுப்பியுள்ளது. நாங்கள் யாருக்கும் அடிமைகள் கிடையாது.இவ்வாறு கூறினார்.

Tags : ministers ,Rajendrapalaji ,bank ,AIADMK ,Local Bank , AIADMK ,Ministers,money,local bank, ,Rajendrapalaji
× RELATED அதிமுகவை கைப்பற்ற அமித்ஷா முயற்சியா? அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேட்டி