×

திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோயிலில் தோஷ நிவர்த்தியில் 2 கோடி மோசடியா?: அரசு பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை:  தூத்துக்குடி மாவட்டம், ஆழ்வார்திருநகரியை சேர்ந்த ராதாகிருஷ்ணன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: நாகப்பட்டினம் மாவட்டம், திருவாவடுதுறை ஆதீனத்திற்கு உட்பட்ட திருவிடைமருதூர் மகாலிங்கசுவாமி கோயிலில் பிரம்மஹத்தி தோஷ நிவர்த்தி செய்தல் மிகவும் பிரசித்தி பெற்றது. இதற்காக பக்தர்களிடம் கட்டணமாக ₹550, உபயமாக ₹100   வசூலிக்கப்படுகிறது. இதில், உபய பணம் 550ல் கோயிலுக்கு 200, பூஜை செலவினங்களுக்காக ₹350 செலவிடப்படுகிறது. இதன் மூலம் கோடிக்கணக்கில் வருவாய் கிடைக்கிறது. இதில் சுமார் ₹2 கோடி அளவுக்கு ேமாசடி நடந்துள்ளதாக புகார்  அளிக்கப்பட்டதன் பேரில், தஞ்சை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். இதைப்போல ஆதீன மடத்திற்கு உட்பட்ட பல கோயில்களில் பல வகையான குற்ற சம்பவங்கள் நடக்கின்றன.

இது போன்ற ெசயல்களால் ஆதீனகர்த்தர் மற்றும் அவரைச் சார்ந்தவர்களுக்கு ெபரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. எனவே, திருவாவடுதுறை ஆதீனத்திற்கு உட்பட்ட கோயில்களில் நடக்கும் மோசடிகள் மற்றும் குற்ற சம்பவங்கள் குறித்து  போலீசில் சிறப்புக்குழு அமைத்து, விசாரணையை துரிதப்படுத்த வேண்டும்.எனவே, திருவாவடுதுறை ஆதீனத்திற்கு உட்பட்ட கோயில்களில் நடக்கும் மோசடிகள் மற்றும் குற்ற சம்பவங்கள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கவும், ஆதீனத்திற்கு தேவையான போலீஸ் பாதுகாப்பு வழங்கவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் ஆர்.மகாதேவன், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர், தஞ்சை மற்றும் நாகப்பட்டினம் கலெக்டர்கள், தஞ்சை டிஎஸ்பி மற்றும் அறநிலையத்துறையினர் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை 4  வாரம் தள்ளி வைத்தனர்.


Tags : Thiruvaiyamarudur Mahalinga Swamy Temple ,Thiruvidaimarudur Mahalinga Swamy Temple Tosha Nirvadi ,Govt , Thiruvidaimarudur, Mahalinga ,Swamy Temple,Tosha Nirvadi: Govt
× RELATED சித்திரை திருவிழா பாதுகாப்பு:...