×

நீட் தேர்வு ஆள் மாறாட்ட வழக்கு உதித்சூர்யா, தந்தை வெங்கடேசன் காவல் மேலும் 15 நாள் நீட்டிப்பு

தேனி:  மருத்துவக்கல்லூரிகளில் சேர்வதற்கான நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்ததாக, தேனி அரசு மருத்துவக்கல்லூரி மாணவர் உதித்சூர்யா பிடிபட்டார். இவ்வழக்கில் சிபிசிஐடி போலீசார், மாணவர் உதித்சூர்யா, அவரது தந்தை  வெங்கடேசனை கைது செய்து கடந்த மாதம் 26ம் தேதி தேனி மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அப்போது இருவரையும் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். நேற்று 15 நாட்கள் காவல் முடிந்த  நிலையில்  இருவரையும், சிபிசிஐடி போலீசார், தேனி ஜூடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நீதிபதி பன்னீர்செல்வம் முன் ஆஜர்படுத்தினர். அப்போது இருவருக்கும் நீதிமன்றக் காவலை மேலும் 15 நாட்களுக்கு அதாவது 24ம் தேதி வரை  நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும், கைதான மாணவர்கள் பிரவீன், ராகுல், இவர்களது தந்தைகள் சரவணன், டேவிட் ஆகியோரை ஜாமீனில் விடக்கோரி சென்னை வக்கீல் விஜயகுமார், தேனி கோர்ட்–்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.  இம்மனு மீதான விசாரணை  நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிசிஐடி தரப்பில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமீன் தருவது சம்பந்தமாக எவ்வித ஆவணங்களையும் தாக்கல் செய்யவில்லை. இதுகுறித்து நீதிபதி கேள்வி எழுப்பியபோது, விசாரணை அதிகாரிகள் சென்னைக்கு சென்றுள்ளதாக சிபிசிஐடி தரப்பில் ஆஜரான எஸ்ஐ தெரிவித்தார். இதையடுத்து விசாரணையை இன்று(அக்.11) ஒத்தி வைப்பதாகவும், அப்போது சிபிசிஐடி  விசாரணை அதிகாரிகள் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

மாணவன் இர்பானுக்கு ஜாமீன் கோரி மனு
நீட் தேர்வு ஆள் மாறாட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள வாணியம்பாடியை சேர்ந்த மாணவன் இர்பானை ஜாமீனில் விடுதலை செய்யக்கோரி, அவரது சார்பில் வக்கீல் ஆனந்தன் நேற்று தேனி ஜூடிசியல் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்  செய்தார்.

Tags : Venkatesan ,Udit Suriya ,Father Venkatesan The Detention , Transformer , Udithsuriya, Father ,Venkatesan
× RELATED டிராக்டரில் குடிநீர் விற்பனை...