×

சீனா அதிபர் வருகையையொட்டி கோர்ட்டில் விசாரணை கைதிகளை 3 நாள் ஆஜர்படுத்த விலக்கு அளிக்க வேண்டும்: நீதிபதிக்கு போலீஸ் கமிஷனர் கடிதம்

சென்னை: சீனா அதிபர் வருகையையொட்டி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள விசாரணை கைதிகளை நாளை வரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த விலக்கு அளிக்க வேண்டும் என்று சிட்டி சிவில் கோர்ட் நீதிபதிக்கு போலீஸ் கமிஷனர்  ஏ.கே.விஸ்வநாதன் கடிதம் எழுதியுள்ளார்.சீனா அதிபர் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு இன்று மற்றும் நாளை மறுநாள் மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது. இதனால் ெசன்னை மற்றும் காஞ்சிபுரத்தில் உச்சகட்ட பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இன்று  பிற்பகல் ெசன்னை வரும் சீனா அதிபரை குடியரசு தலைவர், பிரதமர் ஆகியோர் அரசு முழு மரியாதையுடன் வரவேற்கின்றனர். பின்னர் சீனா அதிபர் கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்குகிறார்.

பிறகு சாலை மார்க்கமாக சீனா அதிபர் மாமல்லபுரம் செல்கிறார். இதனால் பாதுகாப்பு பணிகளில் பெருமளவில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.எனவே, சென்னை மாநகர காவல் துறையில் பல்வேறு வழக்குகளில் விசாரணைக்காக புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள விசாரணை கைதிகளை நேற்று முதல் நாளை வரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த விலக்கு அளிக்க வேண்டும்.  தேவைப்படும் பட்சத்தில் விசாரணை கைதிகளிடம் புழல் சிறையில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று சிட்டி சிவில் நீதிமன்ற நீதிபதிக்கு போலீஸ் கமிஷனர் ஏ.ேக.விஸ்வநாதன் கடிதம்  எழுதியுள்ளார்.

Tags : court ,President ,China ,detainees ,Arrival ,Chancellor , arrival, Chancellor , China,court , days
× RELATED புதிய தலைமை செயலக கட்டிட வழக்கை அரசு...