×

காதல் கணவருடன் சேர்ந்து வாழவிடாமல் தடுக்கும் குடும்பத்தினர் தர்ணாவில் ஈடுபட்ட ஆசிரியை கதறல்

ஸ்ரீகாளஹஸ்தி: காதல் கணவருடன் சேர்ந்து வாழ விடாமல் தடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காளஹஸ்தி சிவன் கோயில் அருகே தர்ணாவில் ஈடுபட்ட ஆசிரியை கதறினார்.ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம், வெங்கடகிரியை சேர்ந்தவர் சுப்புலட்சுமி(30). காளஹஸ்தி அடுத்த காலங்கியில் உள்ள ஜில்லா பரிஷத் மேல்நிலைப்பள்ளியில் ஆங்கில ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். வரதய்யபாளையம் ஜில்லா  பரிஷத் மேல்நிலைப்பள்ளியில் கணித ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் ரமணய்யா(32). இவர்கள் இருவரும் 8 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துக்கொண்டனர். இருவரும் வேறு வேறு சமூகம் என்பதால், சுப்புலட்சுமியின்  மாமியார், மைத்துனர், கணவரின் சகோதரிகள் ஆகியோர் அவரை கொடுமைப்படுத்தியதாக தெரிகிறது.
இதுகுறித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு சுப்புலட்சுமி, காளஹஸ்தி போலீசில் புகார் அளித்தார். இதனையடுத்து போலீசார், குடும்பத்தினரை அழைத்து சமரசம் செய்து வைத்தனர்.

இந்நிலையில் நேற்று சுப்புலட்சுமி சிவன் கோயில் அருகே திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதையறிந்த “சக்தி டீம்” உறுப்பினர்கள் மற்றும் பெண் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சுப்புலட்சுமியிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.  அப்போது அவர் கூறுகையில், கடந்த ஒரு வாரமாக மீண்டும் தன்னை கொடுமைப்படுத்துகிறார்கள். கணவரும் தன்னை கவனிப்பது இல்லை. அவருக்கு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து வைக்க முயற்சி செய்து வருகின்றனர். கடந்த 4  நாட்களாக ரமணய்யா தலைமறைவாகிவிட்டார். அவரை தன்னுடன் சேர்த்து வைக்க வேண்டும். மேலும் கணவருடன் வாழ விடாமல் தடுப்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.இதை கேட்ட போலீசார், இதில் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினர். இதையடுத்து சுப்புலட்சுமி போராட்டத்தை வாபஸ் பெற்றார்.

Tags : darna , A family engaged in dharna to prevent her from living with her husband
× RELATED கணவரின் 2வது திருமணத்தை தடுக்க கோரி 4...