×

மேட்டூர் அணை நீர்மட்டம் 116.73 அடியாக சரிந்தது

மேட்டூர்: மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 18,672 கனஅடியாக உள்ள நிலையில் நீர்மட்டம் 116.73 அடியாக சரிந்துள்ளது.தமிழக-கர்நாடக எல்லையில், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்வதை பொறுத்து, ஒகேனக்கல் காவிரியில் வரும் நீரின் அளவு அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளது. நேற்று 18 ஆயிரம் கனஅடியாக  இருந்த நீர்வரத்து இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 17 ஆயிரம் கனஅடியாக சரிந்துள்ளது. அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் ஆற்றில் பரிசல் இயக்கவும், அருவிகளில் குளிப்பதற்கும்  விதிக்கப்பட்ட தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதே போல் மேட்டூர் அணைக்கான நீர்வரத்தும் சரிந்துள்ளது. நேற்று காலை விநாடிக்கு 24,169 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 18,672 கனஅடியாக சரிவடைந்துள்ளது.  அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு விநாடிக்கு 22 ஆயிரம் கனஅடி தண்ணீரும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 700 கனஅடி தண்ணீரும் திறந்து விடப்படுகிறது. நேற்று 116.97 அடியாக இருந்த  நீர்மட்டம் இன்று 116.73 அடியாக சரிந்தது. நீர்இருப்பு 88.35 டிஎம்சியாக உள்ளது.

Tags : Mettur Dam , Mettur Dam falls to 116.73 feet
× RELATED மேட்டூர் அணையை தூர்வாரி கொள்ளளவை அதிகப்படுத்த வேண்டும்: ஈஸ்வரன்!