×

ராட்சத மீன்

நன்றி குங்குமம் முத்தாரம்

கடலில் உள்ள உயிரினங்களை ஆராய்வது டேவ் எட்வர்ட்ஸின் முக்கிய பணி. கடந்த வாரம் அயர்லாந்தில் உள்ள கடலில் அவரது தூண்டிலில் டுனா மீன் ஒன்று மாட்டியது. 8.5 அடி நீளமுள்ள இந்த மீனின் எடை 270 கிலோ. சமீபத்திய நாட்களில் அயர்லாந்தில் பிடிபட்ட ராட்சத மீன் இதுதான். இந்த மீனுக்கு ஜப்பானில் கடும் கிராக்கி.

அங்கே  இதன் மதிப்பு 23 கோடி ரூபாய். ஆனால், டேவ் இந்த மீனை வீட்டுக்குக் கொண்டு விற்பனை செய்யாமல் அப்படியே கடலில் விட்டுவிட்டார். மனிதாபிமானம் மிகுந்த இந்தச் செயலை அவருடன் வந்தவர்கள் வீடியோவாக பதிவு செய்து இணையத்தில் தட்டிவிட, டேவிற்கு வாழ்த்துகள் குவிகின்றன.

Tags : Ireland, Dave Edward, Giant Tuna Fish, Weight 270 kg
× RELATED கடல் மீன் வரத்து குறைவால் அணை மீன் விலை அதிகரிப்பு