×

பென்னாகரம் அருகே 3500 ஆண்டுகளுக்கு முந்தைய கல் திட்டைகள் கண்டுபிடிப்பு

தர்மபுரி : தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே ஏரியூர் கிராமத்தில் 3500 ஆண்டுகளுக்கு முந்தைய கல் திட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே ஏரியூர் கிராமத்தில், கோட்டை மாரியம்மன்கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு அருகில் சுமார் 3,500 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாற்று நினைவுச் சின்னமான கல் திட்டைகள் கண்டறியப்பட்டுள்ளது. இந்த கல் திட்டைகளை, தர்மபுரி அரசு கலைக்கல்லூரி வரலாற்று பிரிவு பேராசிரியர் சந்திரசேகர் தலைமையிலான குழுவினர் கண்டறிந்தனர்.

இதுகுறித்து பேராசிரியர் சந்திரசேகர் கூறுகையில், பெருங்கற்கால பண்பாட்டின் அடையாளங்களில் கல்திட்டைகள் ஒன்றாகும். இவை ஈமக்குழிகள், கல்வட்டங்கள் போன்ற நினைவுச் சின்னங்களுக்கு முந்தைய கால கட்டத்தை சேர்ந்தவை. பெருங்கற் காலத்திலேயே மக்களுக்கு நினைவிடம் அல்லது நினைவுச்சின்னம் அமைக்கும் பழக்கம் இருந்ததை இக்கருத்துக்கள் காட்டுகின்றன. ஒருவர் இறந்த பிறகு அவர் நினைவாக பாறைகளின்மேல், முக்கோண வடிவில் மூன்று உருண்டை கற்கள் வைக்கப்பட்டு அதன் மேல், சுமார் 2 டன் முதல் 5 டன் வரை எடையுள்ள கற்பலகை வைக்கப்படும். இந்த நினைவு சின்னங்கள், சுமார் 3,500 ஆண்டுகளுக்கு முந்தையதாக கருதப்படுகிறது.

இதற்கு அருகிலேயே ஈச்சம்பாடி மலைக்குன்று பகுதியில், சமீபத்தில் கண்டெடுக்கப்பட்ட பெருங்கற்கால கல்வட்டங்கள் பண்பாடு, இப்பகுதியில் நிலவியதை இக்கல்திட்டைகள் உறுதிப்படுத்தப்படுகின்றது. இன்றைக்கு மக்கள் நடுகற்கள் மூலமாகவும், குத்துக்கள் மூலமாகவும் எவ்வாறு இறந்தவர்களை சிறப்பிக்கும் வகையில், இத்தகைய பெருங்கற்கால பண்பாடு அமைந்துள்ளன என்பதை விளக்குகின்றன. இதுபோன்றுதான் கல்திட்டைகள், பெருங்கற்காலப் பண்பாட்டின் நினைவு சின்னங்களாக அறியப்படுகின்றன என்றார்.

Tags : Pennagaram , Pennagaram ,stone plans,Invention ,3500 years, Dharmapuri
× RELATED ஒகேனக்கல்லுக்கு திடீரென 2500 கனஅடியாக...