உதவி பேராசிரியர் பணிக்கான நெட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் அக்.15-ம் தேதி வரை நீட்டிப்பு

சென்னை: உதவி பேராசிரியர் பணிக்கான நெட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் அக்.15-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. தேர்வுக்கு ஆன்லைன் விண்ணப்பப் பதிவு கடந்த செப்.9-ல் தொடங்கி நேற்றுடன் முடிவடைந்த நிலையில் கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டது.

உதவி பேராசிரியர் பணிக்கான நெட் தேர்வு

இந்தியாவிலுள்ள பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் (Assistant Professor) மற்றும் இளநிலை ஆராய்ச்சியாளர் (Junior Research Fellowship) பணிகளில் சேர்க்கை பெறுவதற்கு தேசிய தகுதித் தேர்வு (UGC-NET-National Eligibility Test) எழுதி தேர்ச்சி பெறவேண்டும். 2019ம் ஆண்டுக்கான தேசிய தகுதித் தேர்வை  இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தால் உருவாக்கப்பட்ட National Testing Agency-NTA நடத்தவுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் இரு முறை நடத்தப்படும் இந்த தேர்வு, இந்த ஆண்டு வரும் டிசம்பர் மாதம் 6ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு UGC NET அமைப்பின் இணையதளம் https://ugcnet.nta.nic.in என்ற பக்கத்தில் வெளியிடப்பட்டது. இந்த தேர்வு எழுதுவதற்கான விண்ணப்பப் பதிவு செப்டம்பர் 9 ம் தேதி தொடங்கியது. முதுநிலைப் பட்டம் பெற்றவர்கள் தங்கள் துறை சார்ந்த நெட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

நெட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீட்டிப்பு

இதனிடையே UGC NET December 2019 தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நேற்றோடு நிறைவடைந்தது. இந்நிலையில், இதனிடையே  உதவி பேராசிரியர் பணிக்கான நெட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் அக்.15-ம் தேதி வரை தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுவரையில், நெட் தேர்வுக்கு விண்ணப்பிக்காதவர்கள் விரைந்து விண்ணப்பிக்கும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள்.

ntanet.nic.in and ugcnet.nta.nic.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைன் வழியாக மட்டுமே நெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியும். தேர்வு முடிவுகள் டிசம்பர் 31ம் தேதி வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பற்றிய முழுமையான விபரங்களுக்குத் தேசிய தேர்வு முகமையின் அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும். https://ugcnet.nta.nic.in/WebInfo/Handler/FileHandler.ashx?i=File&ii=16&iii=Y

Related Stories:

>