×

மேற்கு வேளச்சேரி கக்கன் நகரில் பழுதடைந்த குடிநீர் தொட்டி மாற்றம்

ஆலந்தூர்: சென்னை மாநகராட்சி மேற்கு வேளச்சேரி 177வது வார்டுக்கு உட்பட்ட கக்கன் நகர் 3வது தெருவில் சென்னை மெட்ரோ குடிநீர் வாரியம் சார்பாக அமைக்கப்பட்ட தொட்டி உடைந்து கடந்த 2 மாதங்களாக தண்ணீர் வீணாக வெளியேறிக்கொண்டு இருந்தது. இந்த தண்ணீர் தொட்டியினை மாற்றி தரும்படி இந்த பகுதியில் உள்ள மக்கள் கையெழுத்து வேட்டை நடத்தி 177வது வட்ட மெட்ரோ குடிநீர் வாரிய உதவி பொறியாளரிடம் மனுகொடுத்தும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளதாக அந்த பகுதி மக்கள் குற்றம்சாட்டினர்.  

இந்நிலையில் நேற்று தினகரன் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டு இருந்தது. இதன் எதிரொலியாக சென்னை மெட்ரோ குடிநீர் வாரிய அதிகாரிகள் பார்வையிட்டு தண்ணீர் ஒழுகிய நிலையில் இருந்த தொட்டியினை உடனடியாக அப்புறப்படுத்திவிட்டு புதிய தண்ணீர் தொட்டியினை அமைத்து தந்தனர். இதுகுறித்து செய்தி வெளியிட்டு நடவடிக்கைக்கு துணையாக இருந்த தினகரன் நாளிதழுக்கும், மெட்ரோ குடிநீர் வாரிய அதிகாரிகளுக்கும் பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

Tags : West Velachery In Kakkan ,West Velachery Defective , Kakkan, West Velachery ,drinking water tank ,replacement
× RELATED சென்னையில் சட்டம் ஒழுங்கு...