×

துளித்துளியாய்......

* சர்வதேச கிரிக்கெட்டில் 20 ஆண்டுகளை நிறைவு செய்த முதல் வீராங்கனை என்ற பெருமை இந்திய அணி கேப்டன் மித்தாலி ராஜுக்கு (36 வயது) கிடைத்துள்ளது. கடந்த 1999ம் ஆண்டு அயர்லாந்து அணிக்கு எதிராக ஒருநாள் போட்டியில் அறிமுகமான மித்தாலி இதுவரை 10 டெஸ்ட், 204 ஒருநாள் மற்றும் 89 டி20 போட்டியில் விளையாடி உள்ளார்.
* ஆஸ்திரேலிய டி20 அணியில் ஸ்டீவன் ஸ்மித், டேவிட் வார்னர் இருவரும் மீண்டும் இடம் பிடித்துள்ளனர். ஆஸ்திரேலியா டி20 அணி விவரம்: ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), ஆஷ்டன் ஏகார், அலெக்ஸ் கேரி, பேட் கம்மின்ஸ், கிளென் மேக்ஸ்வெல், பென் மெக்டர்மாட், கேன் ரிச்சர்ட்சன், ஸ்டீவன் ஸ்மித், பில்லி ஸ்டான்லேக், மிட்செல் ஸ்டார்க், ஆஷ்டன் டர்னர், ஆண்ட்ரூ டை, டேவிட் வார்னர், ஆடம் ஸம்பா.
* இளம் வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பூம்ரா மீதான பணிச்சுமையை மிக கவனமாகக் கையாள வேண்டியது அவசியம் என்று தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.
* இந்திய தடகள வீராங்கனை நிர்மலா ஷியோரன் (24 வயது) ஊக்கமருந்து சோதனையில் சிக்கியதை அடுத்து அவருக்கு 4 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், 2017 ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பில் அவர் வென்ற 2 தங்கப் பதக்கங்களும் பறிக்கப்பட்டுள்ளன (மகளிர் 400 மீட்டர் ஓட்டம், மகளிர் 4X400 மீட்டர் ரிலே).
* மகளிர் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ச்சியாக அதிக வெற்றிகளைக் குவித்த அணியாக ஆஸ்திரேலியா மீண்டும் உலக சாதனை படைத்துள்ளது. 20 ஆண்டுகளுக்கு முன்பாக தொடர்ந்து 17 ஒருநாள் போட்டிகளில் வென்றிருந்த அந்த அணி, தற்போது தொடர்ச்சியாக 18 போட்டிகளில் வென்று அசத்தியுள்ளது. இலங்கை மகளிர் அணியுடன் நேற்று நடந்த போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி இலக்கான 196 ரன்களை 27வது ஓவரிலேயே எட்டியது. அலிஸ்ஸா ஹீலி சதம், ரச்சேல் ஹேய்ன்ஸ் அரை சதம் விளாசினர்.
*  தெற்காசிய யு-15 மகளிர் கால்பந்து போட்டித் தொடரின் தொடக்க போட்டியில் இந்திய அணி 4-1 என்ற கோல் நேபாளத்தை நேற்று வீழ்த்தியது.

Tags : Trickle ......
× RELATED ஸ்டொய்னிஸ் 124, கெய்க்வாட் 108* ரன் விளாசல் வீண்: சென்னையை வீழ்த்தியது லக்னோ