×

நாட்டு காய்கறிகளின் விலை குறைந்தது

மதுரை: மதுரை சென்ட்ரல் மார்க்கெட்டில் நாட்டு காய்கறிகளின் விலை குறைந்துள்ளது. மதுரை சென்ட்ரல் மார்க்கெட்டிற்கு ஊட்டி, கொடைக்கானல், பொள்ளாச்சி, மேட்டுபாளையம், ஆந்திரா, கர்நாடகா ஆகிய பகுதியில் இருந்து தினமும் நூற்றுக்கணக்கான லாரிகளில் காய்கறிகள் வருகின்றன. சென்ட்ரல் மார்க்கெட்டில் இன்றைய காலை நிலவரப்படி காய்கறிகளின் வரத்து அதிகமாக இருந்தது. பண்டிகை காலம் முடிந்ததால், சற்று விலை குறைவாக இருந்தது.

இன்றைய விலை (ஒரு கிலோவிற்கு, ரூபாயில்) விபரம்:  கத்திரிக்காய் 25, தக்காளி 20, பச்சை மிளாகாய் 30, பல்லாரி 45, சின்னவெங்காயம் 40, உருளைக்கிழங்கு 25, சேனைக்கிழங்கு 30, கருணைக்கிழங்கு 30, சேம்பு 40, பீன்ஸ் 30, கேரட் 30, காலிபிளவர் ஒரு பூ ரூ.15, நூக்கல் 15, டர்னிப் 15, பட்டர் 120,  சோயாபீன்ஸ் 100, பச்சை பட்டாணி 100, அவரை 40, பீட்ரூட் 15, முள்ளங்கி 15, வெண்டைக்காய் 15, பூசானிக்காய் 10, முருங்கைக்காய் (கிலோ) 30, முட்டைகோஸ் 15, பச்சைமொச்சை 30, சவ்சவ் 15, கருவேப்பிலை 30, மல்லி 25, புதினா 30, இஞ்சி  170, புதிய இஞ்சி 60, கோவைக்காய் 25, கொய்யா பழம் (ெவள்ளை) 80, கொய்யா (சிகப்பு) 150

 200 இலை உள்ள பெரிய இலைக்கட்டு ரூ.300 என விற்பனை செய்யப்பட்டது. ஆங்கில காய்கறிகளான பட்டர்பீன்ஸ், சோயா, பச்சைபட்டாணி ஆகியவை பல மாதங்களாக நூறு ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்படுகிறது. அதே நேரம் நாட்டு  காய்கறிகள் விலை குறைவாக உள்ளது. இது குறித்து சென்ட்ரல் மார்க்கெட் வியாபாரிகள் சங்கத் தலைவர் முருகன் கூறுகையில், ‘பண்டிகை காலம் முடிந்து, முகூர்த்த நாள்கள் இல்லாததால்,  காய்கறிகளின் வரத்து அதிகம் உள்ள நிலையில் விலை குறைந்துள்ளது. நாட்டு  காய்கறின் விலை தொடர்ந்து குறைவாக உள்ளது. பெரிய இலைக்கட்டு கடந்த மாதம் ரூ.இரண்டாயிரம் வரை விற்பனை ஆனது. தற்போது ரூ.200 முதல் ரூ.400 வரை விற்பனை செய்யப்படுகிறது,’ என்றார்.


Tags : Country vegetables are cheaper
× RELATED ரோந்து வாகனங்கள் மூலம் தேர்தல்...