அல்லா நினைத்தால் பாகிஸ்தானில் இருந்து அமெரிக்காவிற்கு விரைவில் ரயில்: பாகிஸ்தான் ரயில்வே அமைச்சர் பேட்டி

இஸ்லாமாபாத்: அண்மையில் பாகிஸ்தானின் தலைநகர் கராச்சியில் இருந்து புறப்பட்ட ரயிலில் பொறுத்தப்பட்டிருந்த வழிகாட்டும் எல்.இ.டி பலகையில் சேரும் இடம் லாஸ் ஏஞ்சல்ஸ் என்று காண்பித்ததால் பயணிகள் குழப்பம் அடைந்தனர்.  இதை பார்த்த பயணி ஒருவர் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டார். இந்த வீடியோ வைராலான நிலையில் அதை பார்த்த சமூகவலைதள வாசிகள் பலரும், டிக்கெட் விலை எவ்வளவு, எப்போது நிலவுக்கு ரயில்  விடுவதாக திட்டம் என அந்நாட்டு ரயில்வேத் துறையை சரமாரியாக கிண்டல் அடித்து பதிவிட்டனர்.

கணினி மூலம் இயங்கும் வழிகாட்டும் எல்.இ.டி பலகையில் ரயிலில் பயணித்த மர்ம நபர்கள் தான் லாஸ் ஏஞ்சல்ஸ் என்று மாற்றியுள்ளதாக அந்நாட்டு ரயில்வேத்துறை விளக்கமளித்தது. இந்த நிலையில், ரயில்வே துறை அமைச்சர் சேக்  ரஷித் அகமத்திடம் இது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, அல்லா விரும்பினால் பாகிஸ்தானில் இருந்து லாஸ் ஏன்ஜல்ஸுக்கு விரைவில் ரயில் இயக்குவோம் என்று பதிலளித்துள்ளார்.Tags : Pakistani ,Pakistan Railways ,Railway Minister ,Pakistani Railways , Pakistani Railway Minister Interviewed by Pakistan Railways
× RELATED பாகிஸ்தான் எல்லையருகே ஆளில்லா விமானம்