×

நவராத்திரி, தசரா கொண்டாட்டம்: மும்பை மற்றும் குஜராத்தில் 200 கார்களை விற்றுள்ளதாக மெர்சிடஸ் பென்ஸ் நிறுவனம் பெருமிதம்

மும்பை: மெர்சிடஸ் பென்ஸ் இந்தியா நிறுவனம், தசரா மற்றும் நவராத்திரியை ஒட்டி மும்பை மற்றும் குஜராத்தில் 200 கார்களை விற்றுள்ளதாக பெருமிதம் தெரிவித்துள்ளது. நவராத்திரி விழா நாட்டில் ஒவ்வொரு மாநிலத்திலும் வெவ்வேறு  பெயர்களில் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. கர்நாடகாவில் மைசூரு மாகாணத்தை ஆட்சி செய்த மன்னர்கள் கடந்த 400 ஆண்டுகளுக்கு முன் நவராத்திரி விழாவை தசரா என்ற பெயரில் ஒவ்வொரு ஆண்டும் பத்து நாட்கள் சிறப்பாக  கொண்டாடி வந்தனர். அந்த பழமையான கலாசாரம் அழியாமல் காக்கும் வகையில், மாநில அரசின் சார்பில் தசரா விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சொகுசு கார்களின் விருப்பப் பட்டியலில் பல ஆண்டுகளாக முன்னணி இடம் வகிக்கும் ஜெர்மனியைச் சேர்ந்த மெர்சிடஸ் பென்ஸ், விழாக்காலங்களில் பெரும்பாலும் வழக்கத்தை விட அதிக கார்களை விற்று வருவதாகக்  கூறியுள்ளது. இந்த ஆண்டு நவராத்திரி மற்றும் தசரா விழாவையொட்டி இந்திய சந்தையில் முக்கிய வாடிக்கையாளர் மையமாகப் பார்க்கப்படும் மும்பை மற்றும் குஜராத்தில் பென்ஸ் கார் விற்பனை களைகட்டியுள்ளது.

மெர்சிடஸ் பென்ஸ் மும்பையில் 125 கார்களும், குஜராத்தில் 74 கார்களும் விற்றுள்ளதாகக் கூறியுள்ளது. மருத்துவர், கணக்குத்தணிக்கையாளர், வழக்கறிஞர், தொழில் அதிபர்கள்  கடந்த ஆண்டைப் போன்றே இந்த ஆண்டும் தங்களின் வாங்கும்  ஆர்வத்தை பிரதிபலித்ததாக மெர்சிடஸ் பென்ஸ் இந்தியாவின் மேலாண் இயக்குநர் மார்டின் ஸெவென்க் கூறியுள்ளார். மும்பை வாடிக்கையாளர்கள் பெரும்பாலும் சி-கிளாஸ், ஈ-கிளாஸ் கார்களையே அதிகம் தேர்வு செய்ததாகவும், அதைத்  தொடர்ந்து ஜி.எல்.சி., ஜி.எல்.இ., கார்களையும் அவர்கள் விரும்பி வாங்கியதாகவும் தெரிவித்துள்ளார். குஜராத்தைப் பொருத்தவரை சி.எல்.ஏ., ஜி.எல்.ஏ., மற்றும் சி.கிளாஸ் ரகங்கள் வாடிக்கையாளர்களின் விருப்பத் தேர்வாக இருந்ததாகக்  குறிப்பிட்டுள்ளார்.


Tags : Mercedes-Benz ,Mumbai ,Gujarat Mercedes Benz ,Gujarat , Mercedes Benz sells 200 cars in Mumbai and Gujarat
× RELATED மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 455...