×

ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றத்தில் ஆஜராக அழைத்து வரபட்ட முன்னாள் பேராசிரியர் நிர்மலா தேவி திடீர் மயக்கம்

ஸ்ரீவில்லிபுத்தூர்: கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளிவந்துள்ள பேராசிரியர் நிர்மலா தேவி விசாரணைக்கு ஆஜரான போது மயங்கி விழுவது போன்ற வீடியோ வெளியாகியுள்ளது. வழக்கு விசாரணைக்காக பேராசிரியர் நிர்மலா தேவி, உதவி  பேராசிரியர் முருகன் மற்றும் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்டம் மகிளா விரைவு நீதிமன்றத்தில் இன்று ஆஜராகினர். அப்போது விசாரணை தொடங்கும் நேரத்தில் நீதிபதிகள் முன்பாக திடீரென நிர்மலா தேவி மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து உடனடியாக அங்கிருந்தவர்கள் அவருடைய முகத்தில் தண்ணீர் தெளித்தும், பெண் காவலர்கள் அவரது கைகளை உரசி சூடு ஏற்படுத்தியும்,  நெஞ்சைத் தடவிக் கொடுத்து இயல்பு நிலைக்குக் கொண்டு வரப் பார்த்தனர்.

ஆனாலும் மூச்சுத் திணறுவது போல நிர்மலா தேவி துடித்து கொண்டிருந்தார். இதையடுத்து ஒரு வழியாக அவரை இயல்பு நிலைக்கு கொண்டு வந்தனர். பின்னர் மூன்று பேரும் வரும் 23ம் தேதி விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டனர். தொடர்ந்து, நிர்மலா தேவி 108 ஆம்புலன்ஸ் மூலம் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டார். வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யும் நேரங்களில் இதுபோன்று உடல்நிலை குறைவு ஏற்பட்டு நிர்மலா தேவி மருத்துவமனைக்கு செல்வதால், வழக்கை விசாரித்து முடிக்க நீதிமன்றத்திற்கு தடங்கல் ஏற்பட்டு வருகிறது.

Tags : Nirmala Devi ,court ,Srivilliputhur Court ,Srivilliputhur , Srivilliputhur, Court, Former Professor Nirmala Devi
× RELATED புதிய தலைமை செயலக கட்டிட வழக்கை அரசு...