×

உலக சாம்பியன் பட்டம் வென்ற பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்துவுக்கு ரூ.10 லட்சம் பரிசு வழங்கிய கேரள ஒலிம்பிக் சங்கம்!

திருவனந்தபுரம்: உலக சாம்பியன் பட்டம் வென்ற பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்துவுக்கு ரூ.10 லட்சம் பரிசு வழங்கி கேரள ஒலிம்பிக் சங்கம் கவுரவித்துள்ளது. முன்னதாக, சுவிட்சர்லாந்தின் பாசெல் நகரில் நடைபெற்ற உலகச் சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் தொடரில், முன்னணி வீரர், வீராங்கனைகள் களம் கண்டனர். இதன், மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதிப் போட்டியில், தரநிலையில் ஐந்தாவது இடம் வகிக்கும் இந்தியாவின் பி.வி.சிந்து, 4-வது இடத்தில் உள்ள சீனாவின் சென் யுஃபேவுடன் மோதினார். அந்தப் போட்டியில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய சிந்து, 21-க்கு -7, 21 க்கு14 என்ற நேர் செட் கணக்கில் எளிதாக வெற்றிபெற்று, இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

இதையடுத்து ஆக.25ம் தேதியன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஜப்பானின் நோசோமி ஒக்குஹாராவை பி.வி.சிந்து எதிர்கொண்டார். தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய பி.வி.சிந்து 21-7, 21-7 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அசத்தினார். இதன்மூலம் முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்று பி.வி.சிந்து. அசத்தினார். இதையடுத்து, உலக சாம்பியன் பட்டம் வென்ற பி.வி.சிந்துவுக்கு பாராட்டுக்கள் பொழிந்த வண்ணம் இருந்தன. அந்த வகையில், கேரள ஒலிம்பிக் சார்பில் பி.வி.சிந்துவுக்கு பரிசுத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், மாநில அரசின் தொகையான ரூ.10 லட்சத்தை இன்று கேரள ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் வி.சுனில் குமார், பி.வி.சிந்துவுக்கு வழங்கி அவரை கவுரவித்தார்.


Tags : Kerala Olympic Association ,PV Sindhu ,world champion badminton champion , World Champion, Badminton, PVC, Prize, Kerala Olympic Association
× RELATED ஆஸி. ஓபன் பேட்மின்டன்: காலிறுதியில் சிந்து