×

சசிலகா லஞ்சம் கொடுத்து சிறையில் சலுகைகளை அனுபவித்தது உண்மை: வினய்குமார் விசாரணைக் குழு அறிக்கை தாக்கல்...!

பெங்களூரு: சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள சசிகலா மற்றும் இளவரசி சொகுசு வாழ்க்கை அனுபவிக்க முன்னாள் டிஜிபி சத்யநாராயணராவ் 2கோடி பணம் பெற்று கொண்டு அனுமதி வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. அப்போதைய சிறைத்துறை டிஐஜி ரூபா அதிரடிசோதனை நடத்தியதில் சசிகலா தரப்பிற்கு சொகுசு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டது  என்ற குற்றச்சாட்டை முன்வைத்தார். இதனிடையே 7-7-2017-ம் ஆண்டு சட்டத்துக்குப் புறம்பாக, சிறையிலிருந்து வெளியே சென்று ஷாப்பிங் சென்றார் என்று வீடியோ பதிவுகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சசிகலா லஞ்சம் கொடுத்து சிறையில் சலுகைகளை அனுபவித்தாரா?, என்பது தொடர்பாக விசாரிக்க வினய்குமார் ஐஏஎஸ் தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. இந்த குழு விசாரணை செய்து அது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் இது தொடர்பான விசாரணை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில்; பெங்களூரு சிறையில் இருந்து விதிமீறி சசிகலா வெளியே சென்றது குறித்து காவல் அதிகாரி ரூபா கூறிய புகார் உண்மை. சசிகலா லஞ்சம் கொடுத்து சிறையில் சலுகைகளை அனுபவித்துள்ளார்.

சிறைத்துறை அதிகாரி சத்யநாராயணராவ்வுக்கு 2 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்துள்ளார். சிறையில் சசிகலாவுக்கு சமையல் செய்யப்பட்டதும் விசாரணையில் தெரிய வந்தது. சசிகலா சிறையில் அடைக்கப்பட்டதும் 5 செல்களில் இருந்த கைதிகளை வெளியேற்றி அரை ஓதுக்கப்பட்டுள்ளது. இரவு உடையில் சசிகலா வெளியேறியதற்கான சிசிடிவி காட்சிகளும் விசாரணை அறிக்கையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


Tags : Sasikala ,Vinay Kumar , Sasilaka, bribery, jail privilege, inquiry committee
× RELATED சிவகங்கையில் நிதி மோசடி : கோரிக்கை குறித்து முடிவெடுக்க ஆணை