×

மக்களிடம் அளித்த வாக்குறுதியை மீறமாட்டோம்; ராமர் கோயில் கட்டப்படும்வரை ஓயமாட்டோம்: உத்தவ் தாக்கரே பேச்சு

மும்பை: மக்களிடம் அளித்த வாக்குறுதியை மீறமாட்டோம். ராமர் கோயில் கட்டப்படும்வரை ஓயமாட்டோம் என்று தசாரா பண்டிகை விழாவில் சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே உறுதியளித்துப் பேசியுள்ளார். தசாரா பண்டிகையின் கடைசி நாளான நேற்று மும்பையில் நடந்த பேரணியில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பங்கேற்றார். பாஜகவுடன் ஏன் நாங்கள் கூட்டணி அமைத்தோம் என்று மக்கள் எங்களிடம் கேள்வி கேட்கிறார்கள். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 370-வது பிரிவை நீக்குவதற்காகத்தான் நாங்கள் பாஜகவுடன் கூட்டணி அமைத்தோம். இப்போது நான் அமித்ஷாவிடம் வைக்கும் கோரிக்கையெல்லாம் விரைவில் நாடு முழுவதும் பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்துங்கள் என்பதுதான் என்று உத்தவ் தாக்கரே கூறினார்.

அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் நிகழ்வு எங்களைப் பொறுத்தவரை அரசியல் நோக்கத்துக்காக அல்ல. அயோத்தியில் ராமர் கோயில் கட்டி முடிக்கும் வரை நாங்கள் தொடர்ந்து குரல் கொடுத்துக்கொண்டேதான் இருப்போம். நாங்கள் மரணிக்கத் தயாராக இருக்கிறோம். ஆனால் நான் அளித்த சத்தியத்தை, உறுதிமொழியை மரணிக்க விடமாட்டோம். மக்களிடம் அளித்த வாக்குறுதியை மறக்கமாட்டோம். இதுதான் சிவசேனாவின் கொள்கை. அதனால்தான் நாங்கள் அயோத்தியில் ராமர் கோயிலுக்காகப் போராடுகிறோம்.

ராமர் பெயரை ஒருபோதும் அரசியலுக்கு சிவசேனா பயன்படுத்தாது. மேலும் ராமர் தனது தந்தைக்காக அனைத்தையும் துறந்தார். அவர் பெயரை நாங்கள் அரசியல் செய்ய பயன்படுத்தலாமா. சரத்பவார், மாயாவதி உள்ளிட்டவர்கள் இந்த தேசத்தை வழிநடத்த முடியும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? அதனால்தான் பாஜகவுடன் மகாராஷ்டிராவிலும், மத்தியிலும் கூட்டணி அமைத்துள்ளோம்.

உத்தரப் பிரதேசத்தில் பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி இடையே கூட்டணி ஏற்பட்டு அதன் கதி என்ன ஆனது என அனைவருக்கும் தெரிந்த ஒன்றாகும். சில நாட்களுக்கு முன் அஜித் பவார் கண்ணீர் விட்டு அழுவதைப் பார்த்தேன். அதுமட்டுமல்ல முதல் முறையாக முதலைக் கண்ணீர் விடுவதைப் பார்த்தேன். அவரின் ஆட்சியில் பழிவாங்கும் அரசியல் செய்தார். ஆனால் நாங்கள் ஒருபோதும் அந்தச் செயலில் ஈடுபடமாட்டோம். மீண்டும் பாஜக, சிவசேனா கூட்டணி மகாராஷ்டிராவில் மலரும் என  உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

Tags : Uttav Thackeray ,Rama , Talk to the people, the Promise, the Rama Temple, Oyamatom, Uttav Thackeray
× RELATED ராம நவமியை முன்னிட்டு ராமேஸ்வரத்தில் பக்தர்கள் ஊர்வலம்