×

மரக்கூடாரங்களில் ஓர் இரவுக்கு ரூ.60 ஆயிரம் வாடகை

நன்றி குங்குமம்

தான்சானியாவின் கொரங்கோரா காடுகளில் இயற்கை எழிலை 360 டிகிரியில் ரசிக்க மலைகளின் உச்சிகளில் அமைக்கப்பட்டிருக்கும் மரக்கூடாரங்கள் இவை. ஆனால், செவன் ஸ்டார் ஹோட்டல் ரூம்களுக்கு சவால் விடுகின்றன.ஆப்பிரிக்க பாரம்பரிய மாளிகைகளின் உள்கட்டமைப்புதான் இந்தக் கூடாரங்களுக்கு முன்மாதிரி. கடுமையான காற்றாலும், மழையாலும் அசைக்க முடியாதபடி ராட்சத குடையைப் போல மேற்கூரையை அமைத்திருக்கிறார்கள். மரங்களின் உச்சியில் இருப்பதால் விலங்குகளாலும் பாதிப்பு இல்லை.

சோலார் தகடுகளின் மூலம் இந்த அறைக்கு மின்சாரம் கிடைக்கிறது. இதில் தங்குபவர்கள் சமைத்துச் சாப்பிடுவதற்கான வசதிகள் கூட உண்டு. இதுவரை நல்ல சூரிய வெளிச்சம் படுகின்ற எட்டு இடங்களில் இந்தக் கூடாரங்களை அமைத்திருக்கிறார்கள்.‘‘பீச் ஹவுஸில் அமர்ந்து தேநீர் அருந்தியவாறே கடல் அழகை ரசிப்பதைப் போல, நீங்கள் யானைகளை, காண்டாமிருகங்களை, சிறுத்தைகளை இங்கிருந்து ரசிக்க முடியும். எந்த நாட்டைச் சேர்ந்தவராக நீங்கள் இருந்தாலும், உங்களின் சொந்த வீட்டில் இருப்பதைப் போன்ற உணர்வைக் கொடுக்க வேண்டும் என்பதே எங்களின் இலக்கு...’’ என்று இந்தக் கூடாரத்தை உருவாக்கியவர்கள் சொல்கிறார்கள்.

இங்கே தங்குபவர்களை இலவசமாக சபாரி அழைத்துச் செல்கிறார்கள். உலகின் அற்புதமான இடங்களில் ஒன்றாக சுற்றுலாப் பயணிகளால் கருதப்படுகிறது இந்த மரக்கூடாரம். இணையத்தில் முன்பதிவு செய்தால் மட்டுமே தங்க முடியும். நவம்பர் வரை மரக்கூடாரம் ஹவுஸ்ஃபுல்.ஓர் இரவு தங்க வாடகை ஜஸ்ட் ரூ.60,000தான்!                         

த.சக்திவேல்



Tags : houses , Tanzania, Wooden House, Rental
× RELATED வருசநாடு அருகே விளை பொருட்களை கொண்டு செல்வதில் சிரமம்