×

விண்வெளியில் அதிசய சம்பவம்

நன்றி குங்குமம் முத்தாரம்

விண்வெளியில் அரங்கேறியிருக்கும் அதிசய சம்பவம் இது. பொதுவாக சிறிய அளவிலான கோள் தான் பெரிய கோளைச் சுற்றி வரும். ஆனால்,  இந்தச் சம்பவம் முற்றிலும் அதற்கு எதிரானது. சூரியனில் 12 சதவீத அளவே உள்ள ஒரு நட்சத்திரம் GJ 3512. இதை சூரிய குடும்பத்திலுள்ள  மிகப்பெரிய கோளான ஜூபிடரில் பாதி அளவு உள்ள கோள் சுற்றி வருகிறது.

இவ்வளவு பெரிய கோள் ஒரு சிறிய நட்சத்திரத்தைச் சுற்றி வரும் சம்பவம் விஞ்ஞானிகளின் மத்தியில் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.  அமெரிக்கா மற்றும் ஸ்பெயினில் உள்ள தொலைநோக்கிகளைப் பயன்படுத்தி இந்தச் சம்பவத்தைக் கண்டறிந்துள்ளனர் விஞ்ஞானிகள்



Tags : space , Astronauts, scientists, wonder
× RELATED மனவெளிப் பயணம்