×

சிரியாவில் இருந்து நமது படைகளை திரும்பப் பெற உள்ளோம்: அமெரிக்க அதிபர் டிரம்ப் திட்டவட்டம்..!

வாஷிங்டன்: சிரியாவில் இருந்து நமது படைகளை திரும்பப் பெற உள்ளோம் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். சிரியாவில் ஆதிக்கம் செலுத்தி வந்த ஐ.எஸ். பயங்கரவாதிகளை ஒழிப்பதற்காக 2011-ம் ஆண்டு அமெரிக்காவின் அப்போதைய அதிபர் ஒபாமா உத்தரவின்பேரில் அமெரிக்க படைகள் சிரியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதனால் ஐ.எஸ். பிடியில் இருந்த பல நகரங்கள் மீட்கப்பட்டு பெரும்பாலான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.  குர்து இன மக்களின் உதவியுடன், ஐ.எஸ்., பயங்கரவாத இயக்கத்தை ஒழித்து விட்டதாக, அமெரிக்கா கூறி வருகிறது.இதனிடையே சிரியாவில் அவ்வப்போது, வன்முறை சம்பவங்கள் நடந்து வருகின்றன. சிரியாவின் அண்டை நாடான, துருக்கி, அப்பகுதியில் ராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளது.

இதையடுத்து, சிரியாவின் வடக்கு எல்லை பகுதியில் உள்ள அமெரிக்கப்படைகளை திரும்பப்பெறுவதாக கடந்த ஜனவரி மாத தொடக்கத்தில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்தார். இதையடுத்து, சிரியாவின் வடகிழக்கு எல்லையில் இருந்து அமெரிக்கப்படைகள் நாடு திரும்ப தொடங்கியுள்ளனர். அதிபர் டிரம்பின் இந்த முடிவுக்கு அமெரிக்க குடியரசு கட்சியை சார்ந்த உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் டொனால்டு டிரம்ப; சிரியாவில் போர் தொடங்கி பத்தாண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது.

முடிவே இல்லாத போர்களில் அமெரிக்க வீரர்கள் உயிரிழப்பதை விரும்பவில்லை என்ற அவர், அதிபர் தேர்தலின் போது சிரியா, ஆப்கானிஸ்தான் நாடுகளில் உள்ள அமெரிக்க படைகளை திரும்ப அழைப்பதாக வாக்குறுதி அளித்ததை சுட்டிக்காட்டினார். அதன்படி, சிரியாவில் இருந்து நமது படைகளை திரும்பப் பெற உள்ளோம். தொடர்ந்து போர் நடக்கும் இடத்தில், நமது படைகளை நிறுத்த விரும்பவில்லை. அமெரிக்கா உலகின் போலீஸ் படை அல்ல. நமது படையினர் திரும்புவது உறுதி இவ்வாறு, அவர் கூறினார்.

Tags : Trump ,troops ,US ,Syria , Syria, Force, US President Trump
× RELATED வரும் நவம்பரில் நடக்க உள்ள அமெரிக்க...