×

இந்த ஆண்டில் ஒரே ஒரு நானோ மட்டும் விற்பனை

புதுடெல்லி: நாட்டில் பொருளாதார மந்தநிலை உச்சகட்டத்தை எட்டிய நிலையில்,  கடந்த 9 மாதங்களில் நானோ கார் தயாரிப்பதை அந்த  நிறுவனம் நிறுத்திவிட்டது. ஏற்கனவே தயாரித்து அனுப்பியவற்றில் கடந்த பிப்ரவரியில் உள்ளூர் சந்தையில் ஒரே ஒரு நானோ காரை மட்டும் விற்றுள்ளது.  கடந்த 2008ம் ஆண்டில் முதல் முறையாக  நானோ கார் தயாரிக்கப்பட்டு 2009ல்  அறிமுகம் செய்யப்பட்டது. சாதாரண மாடல்  கார், மிகக் குறைந்த விலையில் அதாவது ஒரு லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்டது.  அப்போது இருந்து அதற்கு என்று தனி கிராக்கி இருந்தது.  பொருளாதார மந்தநிலை காரணமாக ஆட்டோமொபைல் தொழில் முடங்கியுள்ள நிலையில், கடந்த ஒரு மாதங்களாக ஒரு நானோ கார் கூட தயாரிக்கப்படவில்லை.

கடந்த 2018ம் ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பர் மாதம் வரையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் மொத்தம் 297 நானோ கார்களை தயாரித்து விற்றது. அதன் பின்னர் கார் விற்பனை முடங்கி விட்டது. கடந்த ஒன்பது மாதங்களில் நானோ தயாரிப்பு அடியோடு நின்று விட்டது. பிப்ரவரி மாதத்தில் மட்டும் ஒரே ஒரு நானோ கார் விற்பனை ஆனது. நானோ கார் தயாரிப்பை அடுத்த ஆண்டு 2020 ஏப்ரல் மாதத்துடன் நிறுத்த நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக நிறுவனத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர். மோட்டார் தொழிலில் சுற்றுச்சூழலை பாதிக்காத நிலையில் நவீன தொழில்நுட்பத்துடன் புதிய கார்கள் தயாரிக்கப்பட உள்ள நிலையில், நானோ கார் தொழிலில் மேலும் முதலீடு செய்ய நிர்வாகம் விரும்பவில்லை என்றும் அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.


Tags : Nano
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்...