×

தயாரிப்பாளர் கலைஞானத்துக்கு வீடு வாங்கி தந்தார் ரஜினிகாந்த்

சென்னை:சமீபத்தில் கலைஞானத்துக்கு சென்னையில் பாராட்டு விழா நடந்தது. கலைஞானம் வாடகை வீட்டில் வசிப்பது பற்றி  மேடையில் பேசியவர்கள் குறிப்பிட்டனர். பின்னர் பேசிய ரஜினிகாந்த், என்னை  ஹீரோவாக்கிய கலைஞானத்துக்கு நானே வீடு வாங்கி தருகிறேன் என்று  அறிவித்தார். அதன்படி, விருகம்பாக்கம் பகுதியில் 3 படுக்கை அறை வசதியுடன்  1320 சதுரஅடி பரப்பளவில் அடுக்குமாடி குடியிருப்பின் கீழ் தளத்தில் உள்ள  வீடு வாங்கி கலைஞானத்துக்கு அளித்தார் ரஜினி. அதில் கலைஞானம்  குடும்பத்தினருடன் நேற்று முன்தினம் குடியேறினார். அவரது வீட்டுக்கு சென்ற  ரஜினிகாந்த், கிரகப்பிரவேசத்தில் கலந்துகொண்டார்.



Tags : house ,Rajinikanth ,producer Producer , Producer, Artist, House, Rajinikanth
× RELATED உதகை அருகே பைக்காரா படகு இல்லம் 15 நாட்கள் மூடல்