×

மாதவரம் பகுதிகளில் குளம்போல் கழிவுநீர் தேக்கம் : மக்களுக்கு நோய் பரவும் அபாயம்

புழல்: மாதவரம் மண்டலம் இரட்டை ஏரி, லட்சுமிபுரம், புதிய லட்சுமிபுரம், கடப்பா சாலை, விநாயகபுரம், புத்தாகரம், கல்பாளையம், விஜயலட்சுமி நகர், திருமால் நகர், சாரதி நகர், பத்மாவதி நகர், கட்டிட தொழிலாளர் நகர், வி.எம்.கே.நகர், பிரிட்டானியா நகர், கலெக்டர் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சமீபத்தில் பெய்த மழையால் காலியான இடங்களில் மழைநீர் தேங்கி ஆங்காங்கே குளம் போல காட்சியளித்தது. இந்த மழைநீருடன் கழிவுநீரும் கலந்ததால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. இந்த பகுதிகளில் மாதவரம் மண்டல சுகாதார துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, இந்த பகுதிகளில் நிலவேம்பு கசாயம் வழங்க வேண்டும், தேங்கியுள்ள மழை நீரை உடனுக்குடன் அகற்ற வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.

இந்நிலையில் புத்தாகரம், விஜயலட்சுமி நகர் பகுதியில் லாரி டிரைவர் பிரேம் என்பவருடைய மனைவி ரேகா (27) டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
எனவே டெங்கு காய்ச்சல் வராமல் இருக்க மண்டல சுகாதார துறையினர் உடனடியாக மழை நீருடன் கழிவுநீர் கலந்துள்ள பகுதிகளில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும், சிறப்பு மருத்துவ முகாம்களை நடத்தி சிகிச்சைகளை அளிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.



Tags : Monthly, sewage stagnation, disease
× RELATED தந்தை இறந்த சோகத்திலும் 10ம் வகுப்பில் சாதித்த மாணவி: குவியும் பாராட்டுகள்