×

“ரான்சம்வேர்ஸ் வைரஸ்” கம்ப்யூட்டர்களில் பரவுகிறது : திருமண போட்டோவை அழித்தது 980 டாலர் கேட்டு மிரட்டல்

ஈரோடு: உலகை மிரட்டி வரும் ரான்சம்வேர் வைரஸ் தற்போது ஈரோட்டில் ஸ்டுடியோ உரிமையாளரின் கம்ப்யூட்டரில் இருந்த திருமண போட்டோ, வீடியோக்களை அழித்துள்ளது. சமீபகாலமாக இணைய சேவை பயன்படுத்தும் கம்ப்யூட்டர்களில் “ரான்சம்வேர் வைரஸ்” தாக்குதல் நடத்தப்படுகிறது. அதாவது நாம் இணையதள சேவையை பயன்படுத்தி பணியாற்றி வரும்போது திடீரென்று நம் கம்ப்யூட்டரில் உள்ள கோப்புகள் அனைத்தும் உடனே முடக்கப்படும். பின்னர் முடங்கிய கோப்புகளை மீட்க பணம் கேட்டு மிரட்டல் வரும். முடக்கப்பட்ட கோப்புகளை மீட்க ‘பிட்காயின்’’ எனப்படும் டிஜிட்டல் கட்டண முறையில் 1000 அமெரிக்க டாலர்கள் வரை செலுத்த வேண்டும், தவறினால் அபராதமாக குறிப்பிட்ட டாலர்கள் செலுத்த வேண்டும் என அந்த வைரஸ் மிரட்டல் விடுக்கும்.

இந்த வைரஸ் தாக்குதல் கடந்த சில நாட்களாக தமிழகத்திலும் தாக்குதலை தொடங்கியுள்ளது. இந்த நிலையில் ஈரோடு சூரம்பட்டியை சேர்ந்த கணேசன் (35) என்ற ஸ்டுடியோ உரிமையாளரின் கம்ப்யூட்டரில் நேற்று முன்தினம் ரான்சம்வேர் வைரஸ் தாக்குதல் மூலம் திருமணம் மற்றும் விஷேசங்களுக்கு எடுக்கப்பட்ட அனைத்து போட்டோக்கள், வீடியோக்கள் முடக்கப்பட்டுள்ளது. முடக்கப்பட்ட கோப்புகளை மீண்டும் பார்க்க 980 டாலர்கள் செலுத்த வேண்டும் என்றும் பணம் செலுத்திய பிறகு 72 மணி நேரத்திற்குள் ஒரு சாப்ட்வேர் அனுப்பி வைக்கப்படும் என்றும் அந்த சாப்ட்வேர் கொண்டு முடக்கப்பட்ட கோப்புகளை மீட்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சைபர் கிரைம் போலீஸ் எச்சரிக்கை

சைபர் கிரைம் போலீசார் விடுத்துள்ள எச்சரிக்கையில், ரான்சம்வேர் வைரஸ் தாக்குதலில் இருந்து காப்பாற்றிக்கொள்ள தேவையில்லாத ‘லிங்க்’’குகளை ஓபன் செய்வதையும், பயன்படுத்துவதையும் தவிர்க்க வேண்டும். கம்ப்யூட்டர்களில் ‘ஆன்டி வைரஸ்’’ புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

Tags : 'Ransomwares Virus' Spreads on Computers,Destroying a Wedding Photo
× RELATED சென்னைக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட 5,000 அரிய வகை ஆமைகள் பறிமுதல்