×

ஆந்திர கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா நீர் திறப்பு 1,300 கன அடியாக குறைப்பு : பூண்டி ஏரிக்கு வினாடிக்கு 582 கன அடி மட்டுமே வந்தது

சென்னை: ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து, தமிழகத்திற்கு வினாடிக்கு 2,000 கன அடியாக திறந்து விடப்பட்ட கிருஷ்ணா நீரின் அளவை, 1,300 அடியாக ஆந்திர அரசு திடீரென நேற்று முன்தினம் குறைத்துள்ளது. இதனால், பூண்டி ஏரிக்கு வரும் நீர்வரத்து வினாடிக்கு 582 கன அடியாக குறைந்தது. தமிழகத்தின் குடிநீர் தேவைக்காக, ஆண்டுதோறும் 12 டிஎம்சி கிருஷ்ணா நீரை, கண்டலேறு அணையில் இருந்து, சாய்கங்கை கால்வாயில் ஆந்திர அரசு திறக்க வேண்டும். இந்நிலையில் சென்னை மக்களின் குடிநீருக்காக, தெலுங்கு கங்கை ஒப்பந்தப்படி, கடந்த 25ம் தேதி காலை 10.30 மணிக்கு கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா நீர் திறக்கப்பட்டது.

துவக்கத்தில், வினாடிக்கு 100 கன அடி வீதம் திறக்கப்பட்ட கிருஷ்ணா நீர் படிப்படியாக அதிகரிக்கப்பட்டு 2,000 கன அடியாக தமிழகத்துக்கு திறந்து விடப்பட்டது. இந்நிலையில் தமிழகத்துக்கு திறந்து விட்ட நீரின் அளவை வினாடிக்கு 1,300 கன அடியாக திடீரென குறைத்துக் கொண்டது.
இதனால், நேற்று காலை 6 மணி நிலவரப்படி, கிருஷ்ணா கால்வாய் வழியாக பூண்டி ஏரிக்கு வினாடிக்கு 582 கன அடியாக நீர்வரத்து குறைந்தது. தற்போது ஏரியில் 896 மில்லியன் கன அடி மட்டுமே தண்ணீர் உள்ளது. இது, பொதுப்பணித்துறை மற்றும் சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags : dam ,water opening ,Krishna ,Andhra Pradesh ,Boondi Lake , Krishna water cut,Andhra Pradesh dam ,1,300 cubic feet
× RELATED வைகை அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தம்