×

பழநி கோயில் ரோப்கார் மீண்டும் இயக்கம்

பழநி: பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு வரும் பக்தர்கள் மலைமீது செல்வதற்கு வசதியாக தெற்கு கிரிவீதியில் ரோப்கார் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரோப்காரின் பயண நேரம் 3 நிமிடம் ஆகும். இந்த ரோப்கார் கடந்த ஜூலை 29ம் தேதி வருடாந்திர பராமரிப்பு பணிக்காக நிறுத்தப்பட்டது.    பராமரிப்பு பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து கடந்த 2 நாட்களாக ரோப்கார் பெட்டியில் கற்களை அடுக்கி வைத்து சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. வல்லுநர் குழு ஒப்புதலை தொடர்ந்து நேற்று அதிகாலை ரோப்கார் பக்தர்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. இரண்டு மாத இடைவெளிக்குப் பிறகு ரோப்கார் பயன்பாட்டிற்கு வந்திருப்பதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags : Palani Temple, Ropkar Movement Again
× RELATED தமிழகத்தில் 33 கொரோனா சித்தா சிகிச்சை...