பெண்ணாடம் அருகே சாலையில் தேங்கிநிற்கும் மழை நீரால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதி

பெண்ணாடம்: பெண்ணாடம் அருகே வடகரை ஊராட்சியில் சாலையில் தேங்கி நிற்கும் மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். எனவே அனைத்து தெருக்களிலும் வடிகால் வாய்க்கால் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அடுத்துள்ள வடகரை ஊராட்சியில் கடந்த சில நாட்களில் பெய்த மழையால் அனைத்து தெருக்களிலும் தண்ணீர் தேங்கி நின்று சாலை முழுக்க தண்ணீர் சூழ்ந்து மழை நீர் உள்ளதால் கொசுக்கள் பரவி  வருகிறது. இதனால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.

 இது சம்மந்தமாக ஊராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. இதுபற்றி பொதுமக்கள் கூறுகையில், வடகரை ஊராட்சியில் கடந்த 15 ஆண்டுகளாக சாலைபணிகள் நடந்ததில்லை எனவும், கிராமத்தில் அனைத்து தெருக்களிலும் வடிகால் வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர்.

Tags : Motorists ,civilians ,road ,Pennadam , Motorists and civilians suffering from rain water in the road near Pennadam
× RELATED வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் விழிப்புணர்வு