×

பிரான்சில் ராணுவ விமானத்தில் பயணித்த அமைச்சர் ராஜ்நாத் சிங் : முதல் ரஃபேல் போர் விமானத்தை அடையாளப்பூர்வமாக பெற்றுக் கொண்டார்

பாரிஸ்: பிரான்ஸ் நாட்டின் மெரிக்னாக் நகரில் முதல் ரஃபேல் போர் விமானத்தை அமைச்சர் ராஜ்நாத் சிங் பெற்றுக் கொண்டார். இந்திய விமானப்படைக்கு வாங்க உள்ள 36 விமானங்களில் முதல் விமானத்தை பிரான்ஸிடம் இருந்து அடையாளபூர்வமாக அமைச்சர் ராஜ்நாத் சிங் பெற்றுக் கொண்டார். முதல் கட்டமாக 4 ரஃபேல் போர் விமானங்கள் 2020ம் ஆண்டு மே மாதம் இறுதியில் இந்தியாவுக்கு வர உள்ளது.

அமைச்சர் ராஜ்நாத் சிங் - அதிபர் மேக்ரோனுடன் சந்திப்பு


பிரான்ஸ் நாட்டின் ட்சால்ட் நிறுவனத்திடம் அதிநவீன வசதிகள் கொண்ட 36 ரஃபேல் ரக போர் விமானங்களை 59 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் வாங்க மத்திய அரசு கடந்த 2016ம் ஆண்டு ஒப்பந்தம் செய்தது. இந்த ஒப்பந்தப்படி முதலாவது விமானம் தயாரிக்கப்பட்டு இந்திய விமானப்படையிடம் இன்று ஒப்படைக்கப்படவுள்ளது. இதனை பெற்றுக் கொள்வதற்காக பிரான்ஸ் சென்றுள்ள பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அந்நாட்டு அதிபர் மெக்ரானை சந்தித்து பேசினார். இருநாடுகள் இடையே பாதுகாப்பு மற்றும் ராணுவ உறவுகளை விரிவுபடுத்துவது தொடர்பாக இந்தப் பேச்சுவார்த்தை அமைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.இந்தப் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, ரபேல் விமானத்தைப் பெற்றுக் கொள்வதற்கான நிகழ்ச்சி நடைபெறும் மெரிக்னாக் நகருக்கு அவர் புறப்பட்டார்.

ராணுவ விமானத்தில் பயணித்தார் ராஜ்நாத் சிங்

வெலிஸி - வில்லாகூப்லே  விமானப் படைத் தளத்திற்குச் சென்ற அவரை, அந்நாட்டு விமானப் படை உயர் அதிகாரிகள் வரவேற்றனர்.இதை அடுத்து அந்நாட்டு ராணுவ விமானத்தில் ராஜ்நாத் சிங் பயணித்தார். அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியபடி அவர் விமானத்தில் பயணம் செய்தார். இதையடுத்து மெரிக்னாக்வில் முதல் ரஃபேல் போர் விமானத்தை அமைச்சர் ராஜ்நாத் சிங் பெற்றுக் கொண்டார். விமானப்படைக்கு வாங்க உள்ள 36 விமானங்களில் முதல் விமானத்தை ராஜ்நாத் சிங் பெற்றுக் கொண்டார். முதல் கட்டமாக 4 ரஃபேல் போர் விமானங்கள் 2020ம் ஆண்டு மே மாதம் இறுதியில் இந்தியாவுக்கு வர உள்ளது.  மெரிக்னாக் நகரில் ரபேல் போர் விமானத்திற்கு ஆயுத பூஜை நடத்தப்படவுள்ளது. அது நிறைவடைந்த பின்னர், 2 இருக்கைகள் கொண்ட அந்த விமானத்தில் ராஜ்நாத் சிங் பறக்க உள்ளார்.

 ரஃபேல் விமானத்தின் சிறப்பு அம்சங்கள்


*இரட்டை இன்ஜின் கொண்ட அதிநவீன போர் விமானமான ரஃபேல் வானிலிருந்து பூமியில் உள்ள இலக்குகளை தாக்கும் திறன் கொண்ட நவீன போர் விமானம் ஆகும்.

*இந்த விமானத்தில் உலகின் மிக சக்தி வாய்ந்த ஏவுகணைகளான ஸ்கால்ப் மற்றும் ஸ்டார்ம் ஷேடோ உள்ளிட்ட ஏவுகணைகள் பொருத்தப்பட்டிருக்கும். அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட இந்த ஏவுகணைகள் 4 பிளஸ் பிளஸ் தலைமுறை ஏவுகணைகளாகும்.

*இவை குகைக்குள் பதுங்கியிருக்கும் எதிரிகளை அழிக்க கடினமான பாறையையும், ஊடுருவி தாக்கும் வல்லமை கொண்ட ஏவுகணைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

*சக்திவாய்ந்த போர் கருவிகள், ஏவுகணைகளை பொருத்தி பயன்படுத்த ஏற்றது என்பதால் இந்திய ராணுவத்திற்கு இவை பலம் வாய்ந்ததாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

Tags : Rajnath Singh ,flight ,France ,acquisition ,fighter , Rajnath Singh, Minister of France, Rafael Fighter,
× RELATED தீவிரவாதிகளின் புகலிடமாக பாகிஸ்தான் உள்ளது: ராஜ்நாத் சிங்