×

அமிர்தசரஸ் ரயில் விபத்தில் பலியானோரின் உறவினர்கள் போராட்டம்: இதுவரை தங்களுக்கு நீதி கிடைக்கவில்லை என குற்றச்சாட்டு!

அமிர்தசரஸ்: பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் கடந்தாண்டு ஏற்பட்ட கோரமான ரயில் விபத்து நிகழ்ந்து ஓராண்டு நிறைவு பெறவுள்ள நிலையில், இதுவரை தங்களுக்கு நீதி கிடைக்கவில்லை என்று கூறி உயிரிழந்தவர்களின் உறவினர்கள் பஞ்சாப்பில் போராட்டத்தில் ஈடுபட்டனர். உயிரிழந்த 61 பேரின் வாரிசுகளான தங்களுக்கு அரசு வேலை வழங்கப்படவில்லை என்பது பிரதானமான குற்றச்சாட்டாகும். கோர விபத்துக்கு காரணமானவர்கள் இதுவைர கைது செய்யப்படவில்லை என்று கூறியும் அமிர்தசரஸில் போராட்டக்காரர்கள் முழக்கங்களை எழுப்பினர். தங்கள் கோரிக்கைகளை உடனே நிறைவேற்றாவிட்டால் ரயில் தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டம் நடத்தப்போவதாக உயிரிழந்தோரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்தாண்டு தசரா பண்டிகை நாள் இரவில் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே உள்ள ஜோதா பதக் என்ற இடத்தில் இரவில் ராவண வதம் நிகழ்ச்சி நடைபெற்றது. பட்டாசு வெடிக்கும் போது அதை தண்டவாளத்தில் நின்று ஏராளமானோர் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ரயில் மோதியதில் 61 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்து நாட்டையே உலுக்கியது குறிப்பிடத்தக்கது. இந்த விபத்தானது கடந்தாண்டு அக்டோபர் மாதம் 19ம் தேதி தசரா பண்டிகையின் போது நிகழ்ந்தது. இந்நிலையில், இவ்வருடம் தசரா பண்டிகையானது இன்று(08.10.2019) கொண்டாடப்பட்டு வருகிறது. எனவே, தசரா பண்டிகை நாளில், ரயில் விபத்தில் உயிரிழந்தோரின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


Tags : Relatives ,victims ,Families ,Amritsar ,train accident struggle ,Dussehra , Amritsar, Train Accident, protest , Punjab,Dussehra
× RELATED 9 லட்சம் குடும்பங்களை 10 ஆண்டுகளாக...