×

தீபாவளிக்கு முந்தைய நாள் விடுமுறை வேண்டும்: அரசுக்கு ஆசிரியர் கூட்டமைப்பு வலியுறுத்தல்

சென்னை: தீபாவளிக்கு முந்தைய நாளான சனிக்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை நாளாக அரசு அறிவிக்க வேண்டுமென தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு தமிழக அரசுக்கு வலியுறுத்தியுள்ளது. தீபாவளி பண்டிகை ஒருநாள் தான் என்றாலும், அதற்கான ஏற்பாடுகள், சந்திப்புகள் என 2 ,3 நாட்களுக்கு கொண்டாட்டங்கள் நீடித்திருக்கும். இந்த ஆண்டு இம்மாதம் 27-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று தீபாவளி கொண்டாடப்பட உள்ளது. தீபாவளிக்கு முந்தைய நாளும் பிந்தைய நாளும், வேலை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஆண்டு தீபாவளிக்கு ஏறக்குறைய 5 நாட்கள் விடுமுறை விடப்பட்ட நிலையில், இந்த ஆண்டு விடுமுறை இல்லாத ஒரு சூழலை பள்ளிக்கல்வித்துறை ஏற்படுத்தியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளிக்கு முந்தைய நாளான சனிக்கிழமை வேலை நாளாக இருந்தால் மாணவர் வருகையும் குறைவாகவே இருக்கும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.Tags : holidays ,Pre-Diwali ,Teachers' Federation ,Pre-Diwali Holidays: Teachers' Federation , Diwali, Holidays, Government, Teachers Federation
× RELATED தமிழகம் முழுவதும் ரம்ஜான் பண்டிகை...