×

2019ம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிப்பு : அண்டவியல், சூரியக்குடும்பத்திற்கு வெளியே உள்ள கோள்கள் குறித்த ஆய்வுக்காக பரிசு

சுவீடன் : 2019ம் ஆண்டுக்கான இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு 3 பேருக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது.  இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு ஜேம்ஸ் பீப்ள்ஸ், மைக்கேல் மேயர், திதியர் க்யூலோஸ் ஆகிய 3 பேருக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது.

ஆண்டுதோறும் விஞ்ஞானிகளுக்கு நோபல் பரிசு

டைனமைட் உள்ளிட்ட 355 பொருட்களை தயாரித்து பெரும் பொருள் ஈட்டிய சுவீடன் நாட்டைச் சேர்ந்த ஆல்பிரட் நோபல், தமது மறைவுக்கு பின்னர், மருத்துவம், பொருளாதாரம், இலக்கியம், அமைதி, இயற்பியல் உள்ளிட்ட துறைகளில் மகத்தான சாதனை படைத்தவர்களுக்கு பரிசு வழங்க உயில் எழுதி வைத்திருந்தார்.இதன் படி கடந்த 1901-ம் ஆண்டில் இருந்து ஆண்டுதோறும் உலக அளவில் சிறந்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கி கவுரவிக்கப்படுகிறது. அந்த வகையில் சுவீடன் நாட்டின் ஸ்டாக்ஹோமில் நோபல் பரிசுக் குழுவினர் இந்த ஆண்டு பரிசுக்குரியவர்களை அறிவித்து வருகின்றனர். அதன்படி, அமெரிக்காவைச் சேர்ந்த ஆய்வாளர்கள் வில்லியம் ஜி காலின், கிரேக் எல் செமென்ஸா, இங்கிலாந்தைச் சேர்ந்த சர் பீட்டர் ராட்கிளிப் ஆகியோருக்கு 2019-ம் ஆண்டு, மருத்துவ கண்டுபிடிப்பிற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.

இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிப்பு


இந்நிலையில் 2019ம் ஆண்டுக்கான இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு 3 பேருக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது.

*சூரியக் குடும்பத்திற்கு வெளியேவுள்ள கோள்கள் குறித்த ஆய்வுக்காக 3 பேருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

*இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு ஜேம்ஸ் பீப்ள்ஸ், மைக்கேல் மேயர், திதியர் க்யூலோஸ் ஆகிய 3 பேருக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது.

*இதில் ஜேம்ஸ் பீப்ள்ஸ் கனடா நாட்டைச் சேர்ந்தவர் ஆவார். மைக்கேல் மேயர், திதியர் க்யூலோஸ்  ஆகியோர் சுவிட்சர்லாந்து விஞ்ஞானிகள் ஆவர்.

*சூரியனை போன்ற மற்றொரு நட்சத்திரம் மற்றும் அதைச் சுற்றி வரும் கோளை கண்டுபிடித்ததற்காக மைக்கேல் மேயர், திதியர் க்யூலோஸ் ஆகிய 2 பேருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

*அண்டவெளி உருவானது குறித்தும் அண்டவெளியில் பூமியின் இருப்பிடம் குறித்த ஆய்வுக்காகவும்  ஜேம்ஸ் பீப்ள்ஸ்க்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

*5 கோடியே 74 லட்சம் ரூபாய் மதிப்பிலான பரிசு தொகையில் ஒரு பாதியில் ஜேம்ஸ் பீப்ள்ஸ் பெற உள்ளார். மைக்கேல் மேயர், திதியர் க்யூலோஸ் ஆகியோருக்கு மீதி தொகை பகிர்ந்தளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.   

*இதனிடையே 9-ம் தேதி வேதியியலுக்கும் நோபல் பரிசும், 10-ம் தேதி இலக்கியத்துக்கான நோபல் பரிசும், 11 ம் தேதி அமைதிக்கான நோபல் பரிசும் அறிவிக்கப்படும்.

Tags : Department of Physics, Nobel Prize, James Peebles, Michael Meyer, Didier Guilo, The Universe
× RELATED முக்கிய துறைகளை தன்வசம் வைத்துக்...