20 புதிய நிலவுகள் கண்டுபிடிப்பு... சூரிய மண்டலத்தில் அதிக நிலவுகளை கொண்ட கிரகமாக திகழந்து வந்த வியாழனை பின்னுக்கு தள்ளியது சனி கிரகம்

வாஷிங்டன் : வியாழனை விட சனி கிரகமே அதிக நிலவுகளை கொண்டது என அமெரிக்க விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. சூரிய மண்டலத்தில் ஆறாவதான சனி கிரகத்தை மொத்தம் 82 நிலவுகள் சுற்றி வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சூரிய மண்டலத்தில் அதிக எண்ணிக்கையிலான நிலவுகளைக் கொண்ட கிரகமாக திகழந்து வந்த வியாழனை( 79 நிலவுகள்) பின்னுக்கு தள்ளி சனி கிரகம் முதலிடத்தை பிடித்துள்ளது.

20 புதிய நிலவுகள் கண்டுபிடிப்பு

அமெரிக்காவின் ‘கார்னிஜி இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ்’ என்ற ஆராய்ச்சி மையத்தின் விஞ்ஞானிகள் சுபாரு தொலைநோக்கி (Subaru Telescope) மூலம் ஆய்வு நடத்தினர். இந்த ஆய்வில் சனி கிரகத்தை சுற்றுவரும் 20 புதிய துணைக் கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டன. ‌இந்த புதிய துணைக்கோள்கள் 5 கிலோ மீட்டர் தொலைவில் இருந்து சனி கிரகத்தை சுற்றி வருவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.இவற்றில் 17 துணைக்கோள்கள் சனி கிரகம் சுற்றும் பாதைக்கு எதிரான பாதையில் சனி கிரகத்தை சுற்றி வருகின்றன. மீதமுள்ள மூன்று துணைக் கோள்கள் சனி கிரகம் சுற்றும் பாதையில் சனி கிரகத்தை சுற்றி வருகின்றன.

வியாழனே இன்னும் மிகப்பெரிய நிலவுகளைக் கொண்டுள்ளது

சனி கிரகத்திற்கு எதிரான பாதையில் சுற்றும் துணைக் கோள்கள் ஒரு முறை சனி கிரகத்தை சுற்றி வர 3 வருடம் காலத்தை எடுத்து கொள்கிறது. அதேபோல சனி கிரக பாதையில் சுற்றும் துணைக் கோள்களில் இரண்டு துணைக் கோள்கள் சனி கிரகத்தை சுற்றி வர 2 வருட காலம் எடுத்து கொள்ளும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புதி‌ய துணைக்கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதன் மூலம் அதிக நிலவுகளை கொண்ட கிரகத்தில் சனி முன்னிலை பெற்றுள்ளது. எனினும், மிகப்பெரிய கிரகமான வியாழனே இன்னும் மிகப்பெரிய நிலவுகளைக் கொண்டுள்ளது. இது ஜுபிடருக்கு ஆறுதலாக அமைந்துள்ளது. வியாழனின் பெரிய நிலவான Ganymede பூமியின் பாதி அளவு என்பது குறிப்பிடத்தக்கது.

சனியை  இன்னும் 100 சிறிய நிலவுகள் சுற்றி வரக்கூடும்

இந்நிலையில் கண்டுபிடிப்புக் குழுவை வழிநடத்திய the Carnegie Institution for Sciences-ன் Scott Sheppard கூறுகையில்,புதிய நிலவுகள் ஹவாயில் உள்ள Mauna Kea-வின் Subaru தொலைநோக்கியைப் பயன்படுத்தி கண்டுபிடிக்கப்பட்டன. சனி கிரகத்தை இன்னும் 100 சிறிய நிலவுகள் சுற்றி வரக்கூடும், இதற்கு நேர்மாறாக, சனியின் 20 புதிய நிலவுகள் மிகக் சிறியது, ஒவ்வொன்றும் 5 கி.மீ விட்டம் கொண்டவை. சனியை  இன்னும் 100 சிறிய நிலவுகள் சுற்றி வரக்கூடும், அவை விரைவில் கண்டுபிடிக்கப்படும். உலகின் மிகப் பெரிய தொலைநோக்கிகள் சிலவற்றைப் பயன்படுத்தி, மாபெரும் கிரகங்களைச் சுற்றியுள்ள சிறிய நிலவுகளை கண்டுபிடித்து வருகிறோம் என்று Sheppard கூறினார்.

Related Stories: