×

கும்பல் தாக்குதல்லில் ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் ஈடுபட கூடாது : ஆண்டு விழாவில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் வலியுறுத்தல்

நாக்பூர் : நாட்டின் பல்வேறு இடங்களில் மாடு மற்றும் மதத்தின் பெயரால் கும்பல் தாக்குதல் நடத்தப்பட்டு வரும் நிலையில், இனி அதுபோன்ற காரியங்களில் ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் ஈடுபட கூடாது என்று அந்த அமைப்பின் தலைவர் மோகன் பகவத் கேட்டுக் கொண்டுள்ளார். மராட்டிய மாநிலம் நாக்பூரில் நடைப்பெற்ற ஆர்எஸ்எஸ்-சின் ஆண்டு தினம் மற்றும் விஜயதசமி பண்டிகை கொண்டாட்டத்தின் போது இந்த கருத்தை அவர் வலியுறுத்தி உள்ளார். கும்பல் தாக்குதல்களால் இந்தியா மற்றும் இந்து மதத்தின் நன்மதிப்பு கெட்டு வருவதாக அவர் வேதனை தெரிவித்துள்ளார். இந்து மதத்தின் மீது பிற மதத்தினருக்கு அச்சத்தை ஏற்படுத்துவதமாகவும் மோகன் பகவத் கூறி இருக்கிறார்.

ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் கும்பல் தாக்குதலில் ஈடுபடுவதற்கு பதிலாக அதனை தடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். இதையடுத்து விழாவில் பேசிய மோகன் பகவத்,இந்து என்பவன் விரோதிக்கிறவன் அல்ல.ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சாராம்சமும் விரோதிப்பது அல்ல. நாம் விரோதிக்கக் கூடாது. வாக்குவாதங்களை செய்வது இந்து தர்மம் அல்ல. என்று கூறினார். கும்பல் தாக்குதல் என்ற வார்த்தை இந்திய மூலாதாரத்தில் இல்லாத வார்த்தை என்றும் இது மேற்கத்திய கட்டுமானம் என்றும் மோகன் பகவத் கருத்து தெரிவித்துள்ளார்.கடந்த 1925ம் ஆண்டு விஜயதசமி நாளன்று ஆர்எஸ்எஸ் இயக்கம் தொடங்கப்பட்டது. ஆதலால் தங்கள் தலைமையிடம் அமைந்துள்ள நாக்பூரில் ஒவ்வொரு விஜயதசமி  நாளன்றும் ஆர்எஸ்எஸ் ஆண்டு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று நடந்த விழாவில், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, முன்னாள் அமைச்சர் வி.கே. சிங், எச்.சி.எல் தலைவர் ஷிவ்நாடார் உள்ளிட்டோர் ஆர்எஸ்எஸ் விழாவில் பங்கேற்றனர்.


Tags : Mohan Bhagwat ,volunteers ,RSS ,gang attack , Gang Assault, RSS, Volunteers, Mohan Bhagwat, Anniversary
× RELATED கேரளாவில் ராகுல்காந்தி தீவிர வாக்கு சேகரிப்பு..!!