×

அமெரிக்கா-சீனா இடையே நடைபெறவுள்ள அடுத்த கட்ட பேச்சுவார்த்தை வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட நல்ல வாய்ப்பாக அமையும்: டிரம்ப்

வாஷிங்டன்: அமெரிக்கா சீனா இடையே நடைபெறவுள்ள அடுத்த கட்ட பேச்சுவார்த்தை வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட நல்ல வாய்ப்பாக அமையும் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையே நிலவும் வர்த்தக போரை முடிவுக்கு கொண்டுவர கடந்த 10 மாதங்களாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அந்த வகையில் அடுத்த கட்ட பேச்சுவார்த்தை வருகின்ற 10ம் தேதி நடைபெறும் என்று அமெரிக்க வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. இதில் பங்கேற்பதற்காக சீன துணை பிரதமர் லியு ஹீ  அமெரிக்கா செல்ல உள்ளார். இதை தொடர்ந்து, அமெரிக்க தரப்பில் வர்த்தக பிரதிநிதி ராபர்ட் லைட்ஹைசர் மற்றும் கருவூல செயலாளர் ஸ்டீவன் முனுச்சின் பேச்சுவார்த்தையை முன்னெடுத்து செல்ல உள்ளனர்.

இந்நிலையில் வெள்ளை மாளிகையில், அதிபர் டிரம்ப் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். இதையடுத்து சீன பொருட்கள் மீதான வரி விதிப்பு நடவடிக்கை எதிர்பார்த்த முடிவை தந்துள்ளதாக அவர் தெரிவித்தார். மேலும் சீனாவுடன் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையில் வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுமா? இல்லையா என்று தனக்கு தெரியாது என்றும், ஆனால் நிச்சயம் அதற்கான ஒரு நல்ல வாய்ப்பாக அமையும் என்றும் அவர் குறிப்பிட்டார். தம்முடைய வர்த்தக கொள்கையால் சீன பொருளாதாரம் 24  டிரில்லியன் டாலர் வரை வீழ்ச்சியடைந்துள்ளதாக அதிபர் டிரம்ப் தெரிவித்தார். இதனால் சீனா தங்களுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்ய விரும்புகிறது என்றும் அவர் தெரிவித்தார்.


Tags : US ,China , America, China, Negotiation, Trade Agreement, Opportunity, Trump
× RELATED அமெரிக்கா குற்றச்சாட்டு கல்வான் மோதல் சம்பவம் சீனாவின் திட்டமிட்ட செயல்