×

87-வது விமானப்படைத் தினம்: எந்த விலை கொடுத்தாலும் இந்திய வான் வெளியின் இறையாண்மையை காப்போம்: விமானப்படைத் தளபதி சூளுரை

ஹில்டன்: இந்திய ராணுவத்தின் முப்படைகளில் ஒன்றான விமானப் படை, உலக அளவில் சக்தி வாய்ந்த படைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இது 1932 ஆம் ஆண்டு அக்டோபர் 8ஆம் தேதி தோற்றுவிக்கப்பட்டது. இதனை அடுத்து  ஒவ்வோரு ஆண்டும் அக்டோபர் 8ந்தேதி இந்திய விமான படை தினம் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு 87வது இந்திய விமான படை தினம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. 87-வது விமானப்படை தினத்தை முன்னிட்டு உத்திரப்பிரதேசத்தில் உள்ள ஹில்டன் விமான தளத்தில் கொண்டாடப்படுகிறது. கண்கவர் அணிவகுப்பு மரியாதை, விமானப்படை வீரர்களின் சாகச நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.  ஜாக்குவார், மிக்-21 சுகோய் உள்ளிட்ட போர்விமானங்கள் வானில் வட்டமிட்டு சாகச நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றன.

சினூக் மற்றும் அபாச்சி ரக ஹெலிகாப்ட்டர்கள் வானில் வட்டமடித்து சாகசங்களை நிகழ்த்தியது பார்வையாளர்களை கவர்ந்தது. அப்போது இந்திய விமானப்படை தினத்தை ஒட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் தலைமைத் தளபதி ராகேஷ்குமார்சிங் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர்; விமானப்படை மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கை மற்றும் ஆதரவுக்கு நன்றி. எந்த விலை கொடுத்தாலும் இந்திய வான் வெளியின் இறையாண்மையை காப்போம். நம்முடைய தேச நலனை காக்கும் பணியில் எல்லா நிலைகளிலும் செயலாற்றுவோம் என நாட்டுக்கு நான் உறுதி அளிக்கிறேன் என பேசினார்.

Tags : Air Force Day ,Commander ,Air Force , Air Force Day, Sovereign, Air Force Commander
× RELATED இந்திய விமான படையின் முன்னாள் தலைமை...