×

ஏறுமுகம்.. இறங்குமுகம்.. கண்ணாமூச்சி ஆடும் தங்கம் விலை: சவரனுக்கு ரூ.184 குறைந்து ரூ.29,032-க்கு விற்பனை

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.184 குறைந்து ஒரு சவரன் ரூ.29,032-க்கு விற்பனையாகி வருகிறது. தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.23 குறைந்து ரூ.3,629-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே நேரம் வெள்ளி விலை கிராமுக்கு 20 காசுகள் குறைந்து ரூ.48.70-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

செப்டம்பரில் 30 ஆயிரத்தைத் தாண்டிய தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம் நிலவி வருகிறது. இதன் எதிரொலியாக உள்ளூரிலும் தங்கத்தின் விலையில் மாற்றம் உண்டாகிறது.கடந்த ஜனவரி மாதம் வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு சவரன் தங்கம் விலை 25 ஆயிரம் ரூபாயைத் தாண்டி விற்பனை ஆனது. பின் ஜூன் மாதம் 26 ஆயிரம் ரூபாயை தாண்டி, ஆகஸ்ட் மாதம் 27 ஆயிரம், 28 ஆயிரம், 29 ஆயிரம் என அடுத்தடுத்த மைல்கல்களை எட்டியது. செப்டம்பரில் 30 ஆயிரத்தைத் தாண்டியும் குறைந்தும் மாற்றம் நிலவி வந்தது. இதனிடையே அமெரிக்கா-சீனா இடையே வர்த்தகப் போர் முடிவுக்கு வரும் சாதகமான சூழல் உள்ளதால் தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வந்தது. இந்த நிலையில் இந்த மாதம் சரஸ்வதி பூஜை, விஜயதசமி, தீபாவளி போன்ற விழாக்கள் வரும் பண்டிகைகாலம் என்பதால் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளதையடுத்து விலையும்  அதிகரித்துள்ளது.

கண்ணாமூச்சி ஆடும் தங்கம் விலை

இதன் எதிரொலியாக சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.29,216-க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராம் ஒன்று ரூ.3,652க்கு விற்பனையானது. இந்நிலையில் இன்று காலை நிலவரப்படி,ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரன் ரூ.184 குறைந்து விற்பனையாகி வருகிறது. அத்துடன் கிராம் ரூ.23 குறைந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, ஒரு கிராம் ரூ.3,629-க்கும் ஒரு சவரன் ரூ.29,032-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே நேரம் வெள்ளி விலை கிராமுக்கு 20 காசுகள் குறைந்து ரூ.48.70-க்கும், கிலோ ரூ.48,700க்கும் விற்பனையாகி வருகிறது.

Tags : Sale, Gold, Shaving, Silver, Sale
× RELATED சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின்...