×

தீவிரவாதத்தை ஒழிப்பதற்கான நடவடிக்கை இல்லை : பாகிஸ்தானை கருப்பு பட்டியலில் வைக்க எஃ.ஏ.டி.எஃப் முடிவு

இஸ்லாமபாத் : தீவிரவாதத்தை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை பாகிஸ்தான் மேற்கொள்ளவில்லை என்று சர்வதேச நிதிநடவடிக்கை பணிக்குழு குற்றம்சாட்டியுள்ளது. இது தொடர்பாக எஃ.ஏ.டி.எஃப் எனப்படும் சர்வதேச நிதி நடவடிக்கை பணிக்குழு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில்,தீவிரவாதத்திற்கு எதிராகவும் அவற்றை ஒடுக்குவது தொடர்பாகவும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அளித்த 40 தீர்மானங்களில் 36 தீர்மானங்களை பாகிஸ்தான் நிறைவேற்ற தவறிவிட்டதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீவிரவாதத்தை தனது மண்ணில் இருந்து அகற்றுவதாக ஜக்கிய நாடுகள் அவையில் பாகிஸ்தான் குறிப்பிட்ட 4 தீர்மானங்களை நிறைவேற்றுவதற்கு கூட முயற்சிக்கவில்லை என்றும் எஃ.ஏ.டி.எஃப் சுட்டி காட்டி இருக்கிறது.

தீவிரவாதத்திற்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுக்கும் வரை பாகிஸ்தானை கருப்பு பட்டியலில் வைத்திருக்க சர்வதேச நிதி நடவடிக்கை பணிக்குழு முடிவு செய்துள்ளது. தீவிரவாத அமைப்புகளுக்கு நிதி கிடைப்பதை தடுக்க வேண்டும் என கடந்த ஜூன் மாதமே FATF எச்சரித்திருந்தும், அதனையும் பாகிஸ்தான் கண்டுகொள்ளவில்லை என்றும் குற்றம்சாட்டியிருக்கிறது. பிரான்ஸ் தலைநகர் பாரிஸை தலைமையகமாக கொண்டு செயல்படும் எஃ.ஏ.டி.எஃப் அமைப்பில் 39 நாடுகள் உறுப்பினராக உள்ளன. தீவிரவாதிகளுக்கு எப்படி பணம் கிடைக்கிறது என்பதை கண்காணிக்கும் இந்த அமைப்பு, தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுக்கும் நாடுகளை கருப்பு பட்டியலிடுவது வழக்கம்.

Tags : Pakistan ,FADF ,FATF , Pakistan, FATF, extremists, FATF, UN Security Council, blacklist
× RELATED தேர்தல் ஆதாயத்திற்காக வெறுப்பாக பேசுவதா? பாகிஸ்தான் கண்டனம்