×

ஆரே காலனியில் நள்ளிரவில் மரம் வெட்டப்பட்டது குறித்து விசாரணை: ஆர்வலர்கள் கோரிக்கை

மும்பை: மும்பை, ஆரே காலனியில் மரங்களை வெட்ட உச்ச நீதிமன்றம் நேற்று இடைக்கால தடை விதித்த நிலையில், கடந்த வாரம் இந்த பகுதியில் நள்ளிரவில் மரங்கள் வெட்டப்பட்டதற்கு மெட்ரோ திட்டத்தின் தலைவர்தான் பொறுப்பு என்று கூறியுள்ள சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி கோரியுள்ளனர். மேலும் நள்ளிரவில் மரங்கள் வெட்டப்பட்டது குறித்து விசாரணை நடத்தவும் கோரினர். மரங்கள் வெட்டப்பட்ட இடத்தை ஆய்வு செய்து உண்மையில் அங்கு எவ்வளவு சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்பதை கண்டறிய சிறப்பு புலனாய்வு குழு ஒன்றை அமைக்க வேண்டும் என்று மும்பையில் உள்ள செயின்ட் சேவியர் கல்லூரியின் வரலாற்றுத்துறை தலைவர் பேராசிரியர் அவ்காஷ் ஜாதவ் கூறியுள்ளார்.

இந்த குழுவில் ஆர்வலர்கள், சுற்றுச்சூழல் நிபுணர்கள் இடம்பெற வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.மும்பை மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் அதிகாரிகள் மற்றும் அக்டோபர் 4ம் தேதி இரவு, இருட்டை பயன்படுத்திக் கொண்டு மரங்களை வெட்டித் தள்ளியவர்கள் அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று ஜாதவ் கூறினார். மேலும் மரங்கள் வெட்டப்பட்டதற்கு மும்பை மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் அஷ்வினி பைடே பொறுப்பு ஏற்க வேண்டும் என்றார். மரங்களை வெட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்த சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மீது போடப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் திரும்ப பெற வேண்டும் என்றும் ஜாதவ் கோரினார்.

சிவசேனா கடும் கண்டனம்

ஆரேகாலனியில் மரங்கள் வெட்டப்படுவதற்கு சிவசேனா மத்திய மாநில அரசுகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிக்கையான சாம்னாவில் எழுதப்பட்டுள்ள தலையங்கத்தில்,‘‘மரங்களுக்கு வாக்களிக்கும் உரிமை இல்லை. எனவே அவற்றை வெட்ட அனுமதி கொடுக்கப்படுகிறது. இது என்ன நீதி. ஆரேகாலனியை மீட்க நடக்கும் போராட்டம் ஐரோப்பா அல்லது அமெரிக்காவில் நடந்திருந்தால் பெரிய அளவில் பாராட்டை பெற்று இருக்கும். வெளிநாட்டில் உள்ள வனப்பகுதியில் தீப்பிடித்தால் அழுகிறோம். ஆனால் நமது கண்முன்னே முழு வனப்பகுதியே அழிக்கப்படுகிறது. ஆனால் பிரதமரோ அல்லது முதல்வரோ கவலைப்படவில்லை’’ என்று தெரிவிக்கபட்டுள்ளது.

Tags : Investigation ,Activists ,Midnight Lumber , Investigation , midnight lumber, Aare Colony, Activists demand
× RELATED கிருஷ்ணகிரி அருகே உள்ள SBI வங்கி ATM-ஐ...